முதல்வர் ஸ்டாலினுக்கு பெரிய வியாதி.. "கேடு காலம் வந்துருச்சி".. சட்டென சொன்ன ஜெயக்குமார்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த காலத்தை மறக்கடிக்கும் ‘அம்னீசியா’ வியாதி வந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவதாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, மணிப்பூரில் 2 இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட சம்பவத்தையும், மகாபாரதத்தில் திரெளபதியின் சேலை உருவப்பட்ட சம்பவத்தையும் ஒப்பிட்டு பேசினார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு பதிலடி கொடுத்து … Read more

அரசு போக்குவரத்து கழகம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்கிறது – அமைச்சர் சிவசங்கர் தகவல்

கிருஷ்ணகிரி: மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் மூலம், அரசு போக்குவரத்து கழகம் நல்லதொரு வளர்ச்சி பாதையில் செல்வதாக கிருஷ்ணகிரியில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி புறநகர் கிளை வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் சார்பாக, தருமபுரி மண்டலத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, போக்குவரத்து … Read more

நாங்குநேரி சம்பவம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த நீதிபதி கே. சந்துரு.. "பேரை கேட்டதும் சும்மா அதிருதுல்ல"

சென்னை: நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவர் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுதொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். நாங்குநேரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர் சின்னதுரை, சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த மாணவர் மட்டுமல்லாமல் அவரது தங்கைக்கும் சரமாரியாக அரிவாள் … Read more

மகளிருக்கு மாதாமாதம் ரூ. 1000… இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு!

Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்‌ மற்றும்‌ முதியோர்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடும்பத்தில்‌ உள்ள தகுதிவாய்ந்த பெண்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌ என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“கேஜ்ரிவால் போல ஸ்டாலின் நிபந்தனை விதிக்காதது ஏன்?” – காவிரி பிரச்சினையில் இபிஎஸ் கேள்வி

சேலம்: “எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க, கேஜ்ரிவால் நிபந்தனை விதித்தது போல, காவிரி நீர் தேவை குறித்து காங்கிரஸ் கட்சியிடம் திமுக நிபந்தனை விதித்திருந்தால், தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திருக்கும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொன்விழா மாநாடு குறித்து, அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் சேலத்தை அடுத்த ஓமலூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்று, அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் … Read more

மகப்பேறு விடுப்பு கால ஊதியத்தை திரும்பப்பெறும் உத்தரவுக்கு தடை… உயர்நீதிமன்ற கிளை அதிரடி!

மருத்துவ தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பொது சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் பொருந்தாது என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. மேலும் அவ்வாறு ஊதியம் வழங்கப்பட்டிருந்தால் அதனை மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இம்மாதம் 18-ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆக.12) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா போட்ட கண்டீஷன்!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு மாணவர்களின் கல்வி, ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் காரணமாகவே காலை உணவு, ஊட்டச் சத்தை உறுதி செய், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி குழந்தைகளின் உடல் நலன், உள நலனைக் கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் … Read more

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

Minister Anbil Mahesh Hospitalized: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

அங்கன்வாடி மைய அடிப்படை வசதிகளை உறுதி செய்க: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாதுகாக்கக் கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அனைவரும் அறிவீர்கள். … Read more