தமிழ்நாடு முழுக்கவுமே சம்பவம் இருக்காம்… நல்ல சேதி சொன்ன வெதர்மேன்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும் தமிழகத்தின் சில இடங்களில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகலில் வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் … Read more

திருச்சி என்ஐடி நேரடி நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி என்ஐடியில் நேரடி பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் கீழ் நாடு முழுவதும் 31 என்ஐடிக்கள் (தேசிய தொழில்நுட்ப கழகம்) செயல்படுகின்றன. இதில் திருச்சி என்ஐடி முதலிடத்தில் உள்ளது. இங்கு இயக்குநர், துணை இயக்குநர், பேராசிரியர், … Read more

'கச்சத்தீவை தாரைவார்த்ததே திமுகதான்.. தமிழக முதல்வர் எனக்கு கடிதம் எழுதுகிறார்'.. ஸ்டாலினை சாடிய மோடி!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் அளித்தார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நின்றப்படியே பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சரமாரியாக விளாசினார். குறிப்பாக தமிழகம் குறித்தும் திமுக குறித்தும் பேசினார் பிரதமர் மோடி. அமைச்சர் எவ வேலு, இந்தியா என்றால் வட நாடு என்று பேசியதை குறிப்பிட்ட மோடி, திமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவில் இல்லை போல என விமர்சித்தார். மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்தும் … Read more

விசாரணை, தீர்ப்பெல்லாம் விநோதமா இருக்கு – பொன்முடி வழக்கில் நீதிபதி விளக்கம்

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்வது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  17 பக்க உத்தரவில் விளக்கம் அளித்துள்ளார். 

ஆடி அமாவாசை நாளில் சதுரகிரி கோயிலில் அன்னதானம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: ஆடி அமாவாசை நாளான ஆகஸ்ட் 16-ல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலைப்பகுதியில் அன்னாதானம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர் பெரியசாமி தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆடி அமாவாசையின் போது லட்சணக்கான மக்கள் வருகை தருவர். … Read more

கல்லூரிகளில் ஒரே பாடத் திட்டமா? தமிழக அரசு அறிவித்துள்ள சூப்பர் சலுகை!

தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார் அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர வந்தன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் தன்னாட்சிக் கல்லூரிகள் பக்கமிருந்து எழுந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் … Read more

இந்தியாவின் ‘ஆன்மிகத் தலைநகரம்’ தமிழகம்: தி.மலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

திருவண்ணாமலை: இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது என திருவண்ணாமலையில் நடைபெற்ற சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்கு இன்று (ஆகஸ்ட் 10-ம் தேதி) வருகை தந்தார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள திருமண மகாலில், சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை ஆன்மிக பூமியாகும். இது சிவபெருமானின் பூமி. நினைத்தாலே முக்கி தரும் பூமியாகும். சிவனின் … Read more

திமுகவை பார்த்து பயந்து நடுங்கும் பாஜக: தொண்டர்களை உற்சாகப்படுத்தும் ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி முதலவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக அரசு, திமுகவை பார்த்து பயப்படுவதாகவும், நடுங்குவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் வன்முறையால் கடந்த நான்கு மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. மக்கள் தங்கள் உடமைகளையும், உயிர்களையும் இழந்து வருகின்றனர். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் கொடூரமாக நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவோ, அது குறித்து … Read more

தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி நலத்துறைக்கு மத்திய அரசு நிதி 90% குறைப்பு: ஆர்டிஐ தகவலில் அதிர்ச்சி

மதுரை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் 90 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிஐ தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது. மத்திய அரசும் தன் பங்குக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 2018-19 முதல் 2022-23 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.3,019,65,00,000 (மூவாயிரத்து பத்தொன்பது கோடியே 65 லட்சம் வரை) நிதி ஒதுக்கியுள்ளது. அதில் கடந்த 2018-19 … Read more

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: 10 மாவட்டங்களில் கொட்டும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று காலையிலேயே பல மாவட்டங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சென்னையிலும் இன்று மதியத்துக்கு மேல் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 10) திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு … Read more