புதிய கட்சியை அறிமுகம் செய்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!
தமிழ் மாநில பகுஜன் சபாஷ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்: புதிய கட்சிக்கொடியும் அறிமுகம் செய்து வைத்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழ் மாநில பகுஜன் சபாஷ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்: புதிய கட்சிக்கொடியும் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை: மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் இன்று அறிமுகம் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னைக்கு அருகில் உள்ள பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து இன்றுடன் … Read more
சென்னை: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 5 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு … Read more
சென்னை: 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதி மக்களின் மனநிலை, திமுக அரசு மீதான மக்களின் எண்ணவோட்டம், திமுக அரசுக்கான ஆதரவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டறிந்து … Read more
விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது அதில் இருந்து விலகி உள்ளார். பீஹார் தேர்தல் பணி காரணமாக விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் … Read more
சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ம் தேதி சென்றனர். சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. இதனால், படகில் இருந்து வலையோடு கடலுக்குள் … Read more
Tamilnadu Government Chennai Mini Marathon : தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் மினி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1,20,000 பரிசு கொடுக்கப்பட உள்ளது.
மதுரை: மதுரை எய்ம்ஸ் தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ராணி குமார், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று, ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணி தொடங்கப்பட்டு, பணிகள் இரவு பகலாக நடைபெற்று … Read more
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 19,286 கனஅடியாகவும், மதியம் 24,735 கன அடியாகவும், மாலை 29,423 கனஅடியாகவும் அதிகரித்தது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியிலிருந்து 30,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் … Read more