“இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…” – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

சென்னை: “இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது.

‘பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோராக உயர்த்திய ஈஷா’ – மத்திய அமைச்சர் பாராட்டு

கோவை: பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோராக ஈஷா உயர்த்தியுள்ளது என்றும், இது வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும் முன்னெடுப்பு என்றும் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஈஷா அறக்கட்டளை பல ஆண்டுகளாக அருகிலுள்ள பழங்குடி மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இப்பகுதி மாணவர்கள் உயர் கல்வியை … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?

Kalaignar Magalir Urimai Thogai Online Application : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வரும் ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்முகாம் மூலம் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள … Read more

புதிய கட்சியை அறிமுகம் செய்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

தமிழ் மாநில பகுஜன் சபாஷ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்: புதிய கட்சிக்கொடியும் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் – புதிய கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

சென்னை: மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் இன்று அறிமுகம் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னைக்கு அருகில் உள்ள பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து இன்றுடன் … Read more

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 5 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு … Read more

திமுகவுக்கு ஆதரவு எப்படி? – 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதி மக்களின் மனநிலை, திமுக அரசு மீதான மக்களின் எண்ணவோட்டம், திமுக அரசுக்கான ஆதரவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டறிந்து … Read more

விஜய்க்கு Bye Bye சொல்லும் பிரசாந்த் கிஷோர்! வேறு கட்சிக்கு மாற போகிறாரா?

விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது அதில் இருந்து விலகி உள்ளார். பீஹார் தேர்தல் பணி காரணமாக விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது.