சென்னை பயணிகளுக்கு நற்செய்தி… இனி கோயம்பேடு வரை ஆம்னி பஸ்கள் வரும் – முக்கிய அறிவிப்பு!

Kilambakkam Bus Stand: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ராமேசுவரத்தில் உற்சாக வரவேற்பு: ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அக்னி தீர்த்த கடலில் பிரதமர் புனித நீராடினார். ராமேசுவரத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக பிரதமர் நேற்று (ஜன.19) … Read more

தமிழகத்தில் ஜன.22 விடுமுறை? – ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எழும் கோரிக்கைகள்!

Holiday Request On January 22: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.22ஆம் தேதி அன்று தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

புழுதி சாலையாக மாறிய புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை!

புதுச்சேரி: புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஆரியப் பாளையம் பாலம் பணிக்கு, சர்வீஸ் சாலை அமைக்காததால், புழுதி பறக்கும் மண் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சுவாச நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை. இதில், எம்.என். குப்பம் முதல் புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் வரை சாலை விரிவாக்கம், சென்டர் மீடியன், வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆரியப்பாளையம்- சங்கராபரணி ஆற்றுப் பாலம் அமைக்கும் பணியால் … Read more

சிவராத்திரிக்கு பொதுவிடுமுறையா? ஸ்ரீராம நவமிக்கும் நோ! சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு

National Holidays: ஸ்ரீராம நவமி, சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கல்வராயன்மலை பழங்குடியினருக்கு வன உரிமைச் சான்று வழங்க பேரம்? – ஆளும்கட்சி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் வசிப்பவர்களுக்கு அரசு வழங்கும் விவசாய நில வன உரிமைச் சான்று பெற ஆளும்கட்சி எம்எல்ஏ பரிந்துரைக்க பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 130 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, விவசாய நிலம் உள்ளிட்டவையோடு சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் கல்வராயன்மலையில் … Read more

தலித் மாணவியை சித்திரவதை செய்தவர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளவர்கள் மீது வழக்கு – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவி சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவி ரேகாவை கொடுமைப்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்பவர்கள் மீதும் வழக்கு நீட்டிக்கப்பட வேண்டும். அனைவரிடமும் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் கைது செய்ய வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் இராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி என்பவரின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வீட்டு … Read more

பட்ஜெட், புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவை ஜன.23-ல் கூடுகிறது

சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜன.23-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல், டிச 17, 18 தேதிகளில் அதிகனமழை, வெள்ளம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல், அதற்கான நிவாரணம் வழங்குதல், பொங்கல் … Read more

"நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக" ஸ்ரீரங்கத்தில் தடபுடல் வரவேற்பு

திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு, பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக என கோலமிட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.