“அஜித்குமார் கொலையில் அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை முதல்வர் வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்குதலில் கொலையான அஜித்குமார் குடும்பத்தினரை இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: … Read more

‘2026 ஜனவரி முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்படும்’

மதுரை: ‘‘வரும் 2026 ஜனவரி பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்பட தொடங்கும்’’ என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஹனுமந்தராவ் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தோப்பூரில் மும்முரமாக நடக்கிறது. சமீபத்தில் மருத்துவமனை கட்டிடத்தின் 3டி வீடியோ வெளியாகி, பொதுமக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி, இன்னும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் செயல்படுகிறது. அந்தக் கல்லூரியை மதுரைக்கு … Read more

“திமுகவை வெறுப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” – நயினார் நாகேந்திரன் அழைப்பு

மதுரை: “திமுகவை வேண்டாம் என்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலையை முதலில் வெளிப்படுத்தியது நான்தான். அதன் பிறகே மற்ற கட்சிகள் வந்தன. இப்போது அஜித்குமார் வீட்டுக்கு எல்லோரும் செல்கின்றனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக முதல்வர், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம், … Read more

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமராஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

‘விஷமத்தன’ பாஜக, ‘அக்கறையற்ற’ முதல்வர்… – தவெக செயற்குழுவில் விஜய் பேசியது என்ன?

சென்னை: “சாதி, மதம் கடந்து தங்களுடைய குடியிருப்புகளை, விவசாய பூமியை, வாழ்வாதாரத்தை, நீர்நிலைகளை, காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக் கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை தயவுசெய்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்துப் பேசக்கூடாது. முதல்வரே நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு முதல்வர் கொடுக்க வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தினார். சென்னையை அடுத்த பனையூரில் தவெக மாநில செயற்குழுக் … Read more

ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல.. திட்டமிட்ட படுகொலை.. சீமான்!

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல;  இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார். 

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை விரைவாக நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், … Read more

பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது – விஜய் உறுதி!

திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனை கடத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். … Read more

திருப்பூர் ரிதன்யா வழக்கு! கணவருக்கு ஜாமீன் மறுப்பு.. மாமியாரும் கைது!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.