பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமராஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

‘விஷமத்தன’ பாஜக, ‘அக்கறையற்ற’ முதல்வர்… – தவெக செயற்குழுவில் விஜய் பேசியது என்ன?

சென்னை: “சாதி, மதம் கடந்து தங்களுடைய குடியிருப்புகளை, விவசாய பூமியை, வாழ்வாதாரத்தை, நீர்நிலைகளை, காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக் கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை தயவுசெய்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்துப் பேசக்கூடாது. முதல்வரே நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு முதல்வர் கொடுக்க வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தினார். சென்னையை அடுத்த பனையூரில் தவெக மாநில செயற்குழுக் … Read more

ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல.. திட்டமிட்ட படுகொலை.. சீமான்!

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல;  இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார். 

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை விரைவாக நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், … Read more

பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது – விஜய் உறுதி!

திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனை கடத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். … Read more

திருப்பூர் ரிதன்யா வழக்கு! கணவருக்கு ஜாமீன் மறுப்பு.. மாமியாரும் கைது!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

சென்னை: “சோழகங்கம் ஏரியின் ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் வரும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன், 1023-ஆம் ஆண்டில் கங்கை … Read more

ரிதன்யா கடைசியாக சிரித்த வீடியோ..திருமண சீர்வரிசை பொருட்கள்! நெஞ்சை நொறுக்கும் காட்சிகள்

Tiruppur Dowry Death Video Of Rithanya Smiling : வரதட்சனை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் கடைசி வீடியோ வெளியாகி, நெஞ்சை கனக்க செய்துள்ளது. கூடவே, அவருக்கு சீர்வரிசையாக கொடுத்த பாேட்டோக்களும் வைரலாகி வருகிறது.  

லாக்-அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: குஷ்பு வலியுறுத்தல்

சென்னை: லாக்-அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: லாக்-அப் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொதுமக்களுக்கு போலீஸார் தரும் தொந்தரவுகள் குறித்து, முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரதட்சணை கொடுமையால் தமிழகத்தில் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல, … Read more