ஈரோடு, திருச்சி, ராமநாதபுரத்தில் அரசு அலுவலகத்தில் வேலை! முழு விவரம் இங்கே
Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமாநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமாநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஜூலை 7-ம் தேதி கோவையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பாஜக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பழனிசாமி அறிவித்திருந்தார். பல்வேறு காரணங்களால் சுற்றுப்பயணம் தள்ளிப்போனது. இந்நிலையில் `மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவையில் தொடங்குவதாக பழனிசாமி அறிவித்துள்ளார். நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் … Read more
TNPSC : ஆறுகளில் நிர்வரத்து முன்னறிவிப்புகளை செயற்கைக்கோள் வழியாக தெரிவிக்கும் புதிய இணையதளங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
சென்னை: கோயில் காவலாளி அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? என அரசியல் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இதில், அவரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு: நயினார் நாகேந்திரன்: அஜித்குமார் மீது புகார் அளித்த … Read more
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடியில் அமைக்கப்பட்ட 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடியில் அமைக்கப்பட்ட 50 ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நகர்ப்புறங்களில் மக்கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் … Read more
சென்னை: மின்வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2021- 23 காலகட்டத்தில் தமிழக மின்வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு … Read more
சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலராகப் பணியாற்றியவர் அஜித் குமார். இவர், காரில் இருந்த 10 பவுன் நகைகளை திருடியதாக மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், … Read more
சென்னை: நீட் தேர்வின்போது மின்தடை ஏற்பட்டதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அன்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, தங்களால் சரியாக தேர்வு எழுத முடியாததால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, … Read more
Tamil Nadu government Jobs : சென்னையில் அரசு அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சிவகங்கை: ‘என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார்’ என தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் புகார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். அவர் 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் … Read more