கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000 – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government Liquor Crimes Rehabilitation Assistance : கள்ளாச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

மதுரை: போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் இவ்வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது தாக்கியதில் கொலையானார். இவர் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா, அவரது தாயார் சிவகாமி அம்மாள் ஆகியோர் ஏற்கெனவே 2011-ல் அரசு வேலை வாங்கி … Read more

அஜித்குமார் மீதான திருட்டு புகாரே பொய்யாக இருக்கலாம்… நிகிதாவால் பாதிக்கப்பட்டவர் சொல்வது!

Tamil Nadu Latest News: உயிரிழந்த அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவால் மோசடி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதாக ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

சீமானுக்கு எதிராக டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

மதுரை: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ராக டிஐஜி வருண்​கு​மார் தொடர்ந்​துள்ள அவதூறு வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார். இவர் திருச்சி மாவட்ட எஸ்​பி​யாக இருந்​த​போது, இவர் குறித்து சமூக வலை தளங்​களில் நாம் தமிழர் கட்​சி​யினர் அவதூறு கருத்​துகளை பதி​விட்​டனர். இதையடுத்து சீமானுக்கு எதி​ராக திருச்சி 4-வது நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் டிஜஜி வருண்​கு​மார் அவதூறு வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்​கின் விசா​ரணைக்கு தடை … Read more

6 மாதங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவம்: விசாரணை கைதி மீது தாக்குதல்

பெரியகுளம்: தேனி மாவட்டம் தேவதானப் பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கட்சிக்காரருடன் வந்து புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக 14.1.2025-ல் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பாண்டிய ராஜன் மனு அளித்தார். அதையேற்று, அன்றைய தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அவரிடம் வழங்கப்பட்டது. … Read more

“இது ஓர் அரச பயங்கரவாதம்” – அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன் ஆவேசம்

திருப்புவனம்: “அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள் சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. 5 … Read more

Tirupur Dowry Case : உண்மையான குற்றவாளி ரிதன்யாவின் தந்தைதான்! மீடியாவிடம் சொன்ன விஷயம்..

Tirupur Dowry Suicide Case : திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சனை கொடுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்ததது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, நெட்டிசன்கள் சிலர் ரிதன்யாவின் தந்தைதான் ஏ1 குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய கருவி: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயணைக்கும் ‘பந்து’

சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமை அலுவலகம் வேப்பேரியில் 8 தளங்களுடன் உள்ளது. தரை தளத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர … Read more

அஜித்குமார் மரணம்: ஸ்டாலின் அரசு மீது படிந்த இரத்தக்கறை விலகாது – அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

திருப்புவனம் காவல்நிலையக் கொலை வழக்கில் என்ன செய்தாலும் ஸ்டாலின் அரசின் மீது படிந்த இரத்தக்கறை விலகாது என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்போர் மீது குற்ற வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சட்டவிரோதமாக வணிக ரீதியில் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த விடியல் வீர பெருமாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை, மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மினரல் வாட்டர் கம்பெனிகள் அரசிடம் எவ்வித முறையான அனுமதியுமின்றி … Read more