“கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை

மதுரை: “கொலை செய்யும் நோக்கத்தில் வருவோர் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். உடலில் ஓர் இடம் கூட விடாமல் தாக்கியுள்ளனர்” என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று (ஜூலை 1) மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் … Read more

அஜித் குமார் மரணம்.. கைதான 5 போலீசார் குடும்பத்தினர் தர்ணா!

அஜித் குமார் வழக்கில் கைதான 5 போலீசாரின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல்நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 63.6% மின் கட்டணம் உயர்வு” – தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் விரக்தி

கோவை: “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மின்கட்டணம் 63.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் முத்து ரத்தினம், செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோவை பிரஸ் கிளப் வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாட்டில் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை சார்ந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 45 … Read more

கொலை செய்தது உங்கள் அரசு.. "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்றும் கொலை செய்தது உங்கள் அரசு “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: “அஜித்குமார் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த ஜூன் 28-ம் தேதி அன்று வழக்கு … Read more

ரிதன்யாவின் கடைசி தருணங்கள்! கதறிய தாய்.. என்ன நடந்தது? -முழு விவரம்

Rithanya Last Moments: டார்ச்சர் மற்றும் துன்புறுத்தல் குறித்து ஒரு காணொலி வாக்குமூலம் அனுப்பிய ரிதன்யா. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவியை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: மத்திய அரசு தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக கருதி கல்வி உள்ளிட்ட எல்லா நிதியையும் நிறுத்திவிட்டது. தமிழகம் இரண்டாம் தர மாநிலமாக சென்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையுள்ள கட்சியாக திமுக இருக்கிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் குறித்து வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை-1) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பல்வேறு … Read more

தொடரும் வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் எடுத்த சோக முடிவு!

பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. காவல் துறையினரின் அத்துமீறல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை குறித்து மதுரை அரசு மருத்துவமனை வட்டாரம் கூறியது: ‘அஜித்குமார் பிரேத பரிசோதனை 5 மணி நேரம் நீடித்தது. அது முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது. அஜித்குமார் உடலில் வடது கை மூட்டுக்கு மேலே … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்: 'கொலைக்காரன் கூட இப்படி அடிக்க மாட்டான்' – உயர்நீதிமன்ற உத்தரவு என்ன?

Ajithkumar Lockup Death: அஜித் குமார் லாக்கப் மரணம் வழக்கில் நீதி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.