தொடரும் வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் எடுத்த சோக முடிவு!

பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. காவல் துறையினரின் அத்துமீறல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை குறித்து மதுரை அரசு மருத்துவமனை வட்டாரம் கூறியது: ‘அஜித்குமார் பிரேத பரிசோதனை 5 மணி நேரம் நீடித்தது. அது முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது. அஜித்குமார் உடலில் வடது கை மூட்டுக்கு மேலே … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்: 'கொலைக்காரன் கூட இப்படி அடிக்க மாட்டான்' – உயர்நீதிமன்ற உத்தரவு என்ன?

Ajithkumar Lockup Death: அஜித் குமார் லாக்கப் மரணம் வழக்கில் நீதி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று முதல் 45 நாட்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு நடைபெறவுள்ளது. நாளை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் – காவல்துறை உத்தரவு

Ajithkumar Lockup Death: சிவகங்கையில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில், மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் … Read more

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

சென்னை: “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், … Read more

சிவகங்கை இளைஞர் மரணம்! முதல்வர் முக ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜூலை 4-ம் தேதி பழனிசாமி வழங்குகிறார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதியுதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் 171 நலிந்த தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிதியுதவி அளிக்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள … Read more

அஜித்குமார் லாக்கப் மரணம்: 'ஸ்டாலின் சொன்ன அதே பச்சைப்பொய்' – இபிஎஸ் கேட்கும் முக்கிய கேள்வி!

Ajithkumar Lockup Death: அஜித்குமாரின் லாக்கப் மரணத்திற்கு போலீசார் அளித்த விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.