சிறுவன் கடத்தல் சம்பவம் – பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; ஐகோர்ட்டில் காவல்துறை வாதம்

சென்னை: “சிறுவன் கடத்தல் சம்பவத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கு பின்னணி என்ன? திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ … Read more

திமுக கூட்டணியில் பாமக..? செல்வப்பெருந்தகை பதில்!

பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வபெருந்தகை நேரில் சந்தித்த பின், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.  

கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி பேசித் தீர்ப்பார்கள்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசித் தீர்ப்பார்கள், ” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திமுக அரசு நடத்தியது உண்மையான முருகன் மாநாடு கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப்போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள், முருகன் மாநாடு நடத்தினால் … Read more

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தேதி, தரவரிசைப் பட்டியல் – முழு விவரம்

tnea rank list 2025 category wise ranking : பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

பகுதி நேர வேலை என கூறி இளம் பெண்ணிடம் ரூ.4.62 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: பகுதி நேர வேலை எனக் கூறி இளம் பெண்ணிடம் ரூ.4.62 லட்சம் மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (26). மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் லட்சுமியின் இன்ஸ்டாகிராம் ஐடி-க்கு பகுதி நேர வேலை சம்பந்தமாக லிங் ஒன்று வந்தது. அதை கிளிக் செய்தவுடன் லட்சுமியை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், சில வேலைகளை கொடுத்துள்ளார். … Read more

ஆனி மாதம் புது வீடு, நிலம் பத்திரப்பதிவு செய்யப்போறீங்களா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : ஆனி மாதம் புது வீடு, நிலம் பத்திரப்பதிவு செய்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளுக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்தி தினத்தன்று தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் வழங்கி கவுரவித்து வருகிறார். அதன்படி, நடப்பாண்டு சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள், மேலும் … Read more

நான் முதல்வன் திட்டம் : யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கவும்

Naan Mudhalvan scheme UPSC Incentive Scheme Exam : யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு 2026-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது  

தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்றுடன் நிறைவடைந்தது. ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 13 வீரர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு … Read more

கூமாபட்டி : குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! கலெக்டர் அறிவிப்பு இதோ

Koomappatti, Tamil Nadu government : இன்ஸ்டாகிராம் வைரல் கிராமமான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு சூப்பரான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் அங்கு பூங்கா அமையவுள்ளது.