கூமாபட்டி : குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! கலெக்டர் அறிவிப்பு இதோ

Koomappatti, Tamil Nadu government : இன்ஸ்டாகிராம் வைரல் கிராமமான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு சூப்பரான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் அங்கு பூங்கா அமையவுள்ளது.

அதிமுக துணையுடன் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சங்கரன்கோவில் ‘சம்பவம்’

சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறார்கள். 30 வார்​டு​களை கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் 9 வார்​டு​களில் திமுக வென்​றது. 12 வார்​டு​களை அதி​முக கைப்​பற்​றியது. இருந்தபோதும் கூட்​டணி கட்​சி​களின் தயவில் நகராட்சி தலை​வர் பதவியை அதிர்​ஷ்டக் குலுக்​களில் கைப்​பற்​றியது திமுக. தென்​காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி சேர்​ம​னா​னார். அதி​முக-வைச் சேர்ந்த … Read more

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50,000 கனஅடியாக உயர்வு: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

தருமபுரி / மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்​நாடகா மாநில காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் கனமழை​யால் கர்​நாடக மாநிலத்​தில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. அணை​களின் பாது​காப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​படு​கிறது. இதனால், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து வரு​கிறது. நேற்று முன்​தினம் மாலை​ 16,000 ஆயிரம் கனஅடி​யாக இருந்த … Read more

காங்கிரஸ் எம்.பி. வெற்றியை எதிர்த்து வழக்கு: நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை

சென்னை: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து … Read more

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா–மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக … Read more

“மதுரையில் நடந்தது மோடி பக்தர்கள் மாநாடு” – திருமாவளவன்

திருச்சி: “மதுரையில் நடைபெற்றது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று (ஜூன் 26) கூறியதாவது: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் பேச்சுவார்த்தையில் அதை பார்த்துக் கொள்வோம். பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். திரையுலகில் போதை … Read more

‘கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது…’ – ‘கனவு இல்லம்’ அரசாணை திருத்தத்துக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ‘கனவு இல்லம்’ எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. … Read more

கூமாப்பட்டியில அப்படி என்ன தான் இருக்கு…? விருதுநகரின் 'வைரல்' கலெக்டர் போட்ட பதிவு!

Koomapatty: உலக புகழ்பெற்ற கூமாப்பட்டி குறித்து விருதுநகர் முன்னாள் ஆட்சியர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அவர் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகப் பணியிட மாற்றம் ஆவதும் குறிப்பிடத்தக்கது. 

“அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரகசியம் என்ன?” – ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

கோவை: “முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது” என்று கூறியுள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், “அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரசிகசியத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை. திருப்பத்தூர் மாவட்ட அரசு விழாவில் பேசிய … Read more

“அண்ணா பெயரை உச்சரிக்க ஸ்டாலினுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?” – இபிஎஸ் காட்டம்

சென்னை: “அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு அரசு விழா என்ற பெயரில் … Read more