மதுரை காமராசர் பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகுதியானவர்தான்: நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அமைச்சருக்கு கடிதம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், பல்கலைக்கழக சட்டங்களின்படி தகுதியானவர். இதுகுறித்து தவறான விளக்கமளிக்கும் ஆசிரியர் சங்கத்தினரை கண்டிக்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் பெ.முருகன், செயலாளர் கோ.சுந்தரமூர்த்தி ஆகியோர் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய … Read more

தமிழகத்துக்கு திமுக வேண்டாம் என்பதே பாஜக-அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

திமுக இனி தமிழகத்துக்கு வேண்டாம் என்பதே எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லை சுத்தமல்லி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு திமுக இனி வேண்டாம் என்பதை எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு. இதை மக்கள் பிரதிபலிப்பார்கள். நிச்சயம் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. டாக்டர் ராமதாஸை, செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து … Read more

“அதிமுகவுக்குள் மோதலை உருவாக்கி கட்சியை காலி செய்ய பாஜக முயற்சி” – முத்தரசன்

திண்டுக்கல்: “தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட யாரும் இல்லை. அவர்களின் கூட்டணி கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் இன்று (ஜூன் 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும். முதல்வராக அதிமுகவை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அது யார் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். … Read more

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட்

சென்னை: திமுகவின் மின்வாரிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சாவூர் சரக செயலாளராக இருந்த பால வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. … Read more

ஓய்வூதியம் அறிவிப்பு! முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

“ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்

சென்னை: “விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம் என்பது திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸை சுற்றி 3 தீய சக்திகள் உள்ளன. ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய். ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் இன்று (ஜூன் 28) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி … Read more

போதைப்பொருள் விவகாரம்: ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்.. கொந்தளித்த சீமான்!

ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். இவர்கள் கைது செய்யப்பட்டால் போதைப்பொருள் நிறுத்தப்படுமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த ‘உருது’ பாட ஆசிரியர் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவர், 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை எனக் கூறி, ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் … Read more

தமிழ்நாடு என்றாலே ஒன்றியத்தில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி.. ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராக அல்ல என ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் … Read more