சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்பவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்பதற்காக தனுஷின் வீட்டுக்கு வந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, முன்னாள் … Read more

செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூன் 30) நடந்தது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 593 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் … Read more

சிவகங்கையில் அடுத்த அதிர்ச்சி.. இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சிவகங்கையில் லாக்கப் டெத்தை தொடர்ந்து இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு: … Read more

லாக்கப் மரணங்கள்… யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை – சொல்லாமல் சொல்லிய முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin News: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என சட்டம் ஒழுங்கு நிலை குறித்து நடந்த ஆய்வு கூட்டம் வலியுறுத்தியதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

“திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல” – உதயநிதி விவரிப்பு 

சென்னை: “புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். இது வெறும் வார்த்தை ஜாலத்துக்காக அல்ல” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவரித்துள்ளார். தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 19-வது தேசிய புள்ளியியல் தின விழா சென்னை நந்தனத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளங்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு … Read more

"திமுகவினர் பைத்தியம் பிடித்து திரிகின்றனர்" – எல். முருகன் ஆவேசம்!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எல்.முருகன், திமுகாவை கடுமையாக சாடி பேசினார். மேலும், ஏ. ஆர். ரகுமான் சந்திப்பு குறித்து விளக்கினார். 

“ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு

திருச்சி: “ஏ.ஆர்.ரஹ்மானுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. நடிகை மீனா பாஜகவுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கூறினார். திருச்சியில் இன்று (ஜூன் 30) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவினர் தோல்வி பயத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். முதல்வர் ஸ்டாலின் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது. காவல் நிலையத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். முதல்வரின் உத்தரவை … Read more

பாஜக – அதிமுக இடையே இணைப்பு தான் உள்ளது, பிணைப்பு இல்லை – தொல். திருமாவளவன்!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக – பாஜக இடையே பிணைப்பு இல்லை என கூறி உள்ளார். 

அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமலாக்குவதென்பது ஏற்கெனவே தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மேம்படுத்துவது, மக்களுக்கான ஆரோக்யமான … Read more