சூப்பர்! 73 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் ஆன நடிகை!!

மலையாள குணச்சித்திர நடிகை தனது 73ஆவது வயதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். பகத் பாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தில் அபர்ணாவுக்கு அம்மாவாக நடித்தவர் குணச்சித்திர நடிகை லீனா ஆண்டனி. படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் திடீரென ஒரு பிரேக் எடுத்துக் கொண்டார். காரணம், இவர் தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். சிறு வயதில் படிப்பை தொடர முடியாத வருத்தத்தில் இருந்த இவருக்கு மகனும், மருமகளும் … Read more

பிப்ரவரி 2-வது வாரத்தில் சென்னை சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகை: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் வேல்மாறன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக. முருகேசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை … Read more

குடியரசு தின விடுமுறை கால சிறப்பு ரயில்கள்: முன்பதிவு தொடக்கம்!

நாடு முழுவதும் வருகிற 26ஆம் தேதி 74ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் … Read more

சுயலாபத்துக்காக அதிமுகவை அடகுவைத்து தவிக்கின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பூந்தமல்லி: மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்று சுயலாபத்துக்காக ஆட்சியை அடகு வைத்தவர்கள், இன்று கட்சியை அடகுவைத்து தவித்து கொண்டிருக்கின்றனர் என அதிமுகவை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.  சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில், நேற்று மாலை போரூர் அருகே காரம்பாக்கத்தில் உள்ள நவரத்தினமால் ஜெயின் திடலில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. … Read more

சென்னை வாசிகள் கவனத்திற்கு | கட்டணம் செலுத்தாவிட்டால் ஜப்தி – அதிரடி அறிவிப்பு!

சென்னை குடிநீர் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பின், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியுடன் அதற்குரிய குடிநீர் கட்டணத்தையும் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாவிடினும் குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஒவ்வொரு அரையாண்டும், முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால், வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் … Read more

தமிழகத்தில் 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன்

கரூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டு உள்ளதாக மாநில தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலத்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், கரூர் மாவட்ட மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஜன. … Read more

மாதவரம் பேருந்து நிலையம்: கோயம்பேட்டில் மொத்தமாக விடைபெறும் பேருந்துகள்!

மாதவரம் பேருந்து நிலையத்தில் அறநிலைத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் லட்சுமி இ.ஆ.ப., மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. தனி பேருந்து நிலையம் மாதவரத்தில் சென்னையில் இருந்து வடக்கு … Read more

Chennai Gold Rate: நகை வாங்க போறீங்களா? குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் சரி தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை மட்டும் குறைந்ததே இல்லை. அந்த வகையில் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தூயத் … Read more

ஆம்பூர் ஷூ, தோல் தொழிற்சாலையில் 3வது நாளாக வருமானவரித்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஆம்பூர்: ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ, தோல் தொழிற்சாலைகளில் 3 நாட்களாக நடந்த ஐடி ரெய்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொம்மேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியா ஷூ தொழிற்சாலையில் கடந்த 19ம்தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமாக அருகிலுள்ள மற்றொரு ஷூ தொழிற்சாலை, ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 14 பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் 3 நாட்களாக … Read more