நாளை (03.12.2022) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

நாளை (டிசம்பர் 3ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு நாளை ( டிசம்பர் 3ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை … Read more

கூகுள்பே மூலம் ரூ.3,00,000 திருடிய 14 வயது சிறுவன்..!! எப்படி தெரியுமா ?

சென்னை மருத்துவரான ராமசந்திரன். இவர் கே.கே நகரை சேர்ந்தவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்ற போது, இவரது வங்கி கணக்கிலிருந்து 3 லட்ச ரூபாய் வரை சிறுக சிறுக பணம் எடுத்திருப்பதை கண்டு மருத்துவர் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே பணம் காணாமல் போனது குறித்து மருத்துவர் ராமசந்திரன் இணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மருத்துவரின் வங்கி கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில் கே.கே நகரில் … Read more

போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற 1,241 பேருக்கு பணப்பலன்கள்: அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

சென்னை: போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற 1,241 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன் காசோலைகளை வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது. நிகழ்வில் 22 பேருக்கு காசோலைகளை அமைச்சர் நேரடியாக வழங்கினார். இதேபோல் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் … Read more

100 வார்டுகள்… த்ரீ ஸ்டார் அங்கீகாரம்… அடுத்த சம்பவத்திற்கு ரெடியான கோவை மாநகராட்சி!

கோவை மாநகராட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூன்று நட்சத்திர அங்கீகாரம் பெற எடுக்கப்பட்டு வரும் முயற்சி கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் ”தூய்மை பாரத திட்டம் 2.0 திடக்கழிவு மேலாண்மை” என்ற திட்டத்தின் கீழ் ஸ்டார் ரேட்டிங் (Star Rating) அங்கீகாரமானது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டார் … Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வழக்கு: கூட்டுறவுத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை விவசாயிகளிடம் இருந்து  கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில், கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 2017 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்தாண்டு, 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே … Read more

இங்கிலாந்து பவுண்டு இருக்கு இந்திய பணம் கிடைக்குமா? மோசடிக்கு முயன்ற ஈரானியர்கள்

பெரம்பலூர் அருகே தபால் நிலையத்தில் புகுந்து; ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் மற்றும் சித்தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் அத்துமீறி அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து பணியில் இருந்த பெண்ணிடம் தங்களிடம் இங்கிலாந்து பவுண்டு உள்ளது அதற்கு இந்திய பணம் தர முடியுமா என்று … Read more

தமிழகத்தில் இன்று (02.12.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (டிசம்பர் 2ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் உயா்அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக சத்தியநேசம் தெரு, ஜோஸ்வாதெரு, கிரெளன்தெரு, ஈஸ்ட் ஆப்தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது திருப்பூர் குமார்நகர் … Read more

சென்னையில் ஜனவரி 16,17,18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி ..!!

தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தக கண்காட்சியில் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பன்னாட்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவர்களின் நாட்டின் பெருமைகள், சிறந்த புத்தகங்களை கண்காட்சியில் வைக்கலாம் எனவும் புத்தகங்களை … Read more