கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை: சிபிசிஐடி அதிகாரிகள் தகவல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவைப்பட்டால் சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாக்கள் உள்ளன. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொள்ளை கும்பல் நுழைந்தது. அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவிற்குள் நுழைந்து சில ஆவணங்கள் … Read more

"எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்" – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுனர்கள் தானாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் … Read more

TANGEDCO- Aadhar Link: ஆதார்- இ.பி இணைப்புக்கு அதிக கட்டணம் வசூல்; தனியார் மையங்கள் சுறுசுறுப்பு

TANGEDCO- Aadhar Link: ஆதார்- இ.பி இணைப்புக்கு அதிக கட்டணம் வசூல்; தனியார் மையங்கள் சுறுசுறுப்பு Source link

யானை லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!!

புதுச்சேரியில் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் யானை வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. யானை லட்சுமி புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மயங்கி … Read more

கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை டிச.5-ல் இருந்து நேரடி வகுப்புகள்: உயர் நீதிமன்றம் அனுமதி 

சென்னை: கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் டிசம்பர் 5-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை … Read more

ஆட்டோ கட்டணம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை என தெரிவித்து இருந்தார். மேலும், … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு – சீமான் கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினைப்போல திமுக அரசும் மக்களின் தகவல்களை ஒவ்வொன்றாக ஆதார் எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்துவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்நுகர்வோராக உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இணைக்க வேண்டுமென … Read more

பணி முடிக்காமல் நிதி மோசடியில் ஈடுபட்ட 12 அரசு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை

மதுரை: பணி முடிக்காமல் நிதி மோசடியில் ஈடுபட்ட 12 அரசு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க  மாவட்ட ஆட்சியர் பரிந்துரை வழங்கியுள்ளார். தணிக்கையில் ஆழ்துளை கிணறு அமைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 12 ஒப்பந்ததாரர்கள் மீது சமூக ஆர்வலர் அசாருதீன் ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

வறுமை ஒருபக்கம்..நோயால் அவதியுறும் இரு பெண் குழந்தைகள் மறுபக்கம்.. பரிதவிக்கும் தாய்

பெரம்பலூர் அருகே தனது இரண்டு பெண் குழந்தைகளும் கல்லீரல் வீக்கம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வறுமையின் காரணமாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாமல் தவிக்கிறார் பானுமதி என்ற ஏழைத் தாய். பெரம்பலூர் அருகே பூலாம்பாடி யை சேர்ந்த பானுமதி-குமார் தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. மூத்த குழந்தைக்கு 10 மாதத்திலும், இரண்டாவது குழந்தைக்கு 12 மாதத்திலும் கல்லீரல் வீக்கம் எனும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தைளுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சென்னை … Read more