தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன் என்பது சரியானதாக இருக்காது – தமிழிசை

கும்பகோணம் அருகே, சுவாமிமைலையில், 23 அடி உயரமுள்ள நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் திருச்சி வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பா.ஜ.க.,வினர் வரவேற்றனர். இதையும் படியுங்கள்: அதிமுக சாவி விவகாரம்: ஓ.பி.எஸ், மேல்முறையீடு மனு தள்ளுபடி அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தெரிவித்ததாவது: தமிழகத்தில் திருச்சிக்கும், தஞ்சைக்கும் … Read more

2013-ல் பாலத்தை சேதப்படுத்திய வழக்கில் பாமகவிடம் இழப்பீடு கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் ரத்து: ஐகோர்ட் 

சென்னை: சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது பாலத்தை சேதப்படுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சியிடம் 18 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து கடந்த 2013-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாமகவினர் காவல்துறை அனுமதியை மீறி மரக்காணம் அருகேயுள்ள கட்டயம் தெரு என்ற பகுதிக்குள் நுழைந்து … Read more

பள்ளி மாணவர்கள் மது அருந்தும்விவகாரம்..! – உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை..!

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். … Read more

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கம் கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இந்தாண்டு 1,000 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதற்காக ₹500 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி ஸ்தலமாக விளங்கும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரசித்தி … Read more

திண்டுக்கல் டூ பழனி: மின் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம் – தெற்கு ரயில்வே எச்சரிக்கை

திண்டுக்கல் – பழனி புதிய மின் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் ரயில் பாதையை நெருங்க வேண்டாம் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் – பழனி ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த புதிய 58 கிலோமீட்டர் மின்மய ரயில் பாதையில் நாளை முதன்மை தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த் ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து … Read more

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்த உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது… அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக, ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சி அலுவலகம் அமைந்த பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால், சட்டம் … Read more

TNEB-ன் 8,000 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டிஎன்பிஎஸ்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கலைச்செல்வி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2016-ம் ஆண்டு கள உதவியாளர் பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் மூலம் 3170 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில் 900 … Read more

பார்லிமென்ட் எலெக்‌ஷனும் 10 இடங்களும்.. பாஜகவின் பலே பிளான் ரெடி!

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த நரசிம்மன் பேசியதாவது: “ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி, ஓசூர் இரயில் திட்டத்திற்கு ஃபைனல் லொகேஷன் சர்வே (FLS) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.5 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள இரயில்வே துறை அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வே பணிகளுக்காக இரயில்வே துறை வரும் 16-ஆம் தேதி ஒப்பந்தம் கோர உள்ளது. … Read more

திருப்போரூர் அருகே விபத்தில் சிக்கி புது மாப்பிள்ளை உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் – கலா தம்பதியினர். இவர்களது மகன் இராஜ் (32 வயது), இவர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் மின் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இன்று 12 ஆம் தேதி திருப்போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.  இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி மணமகன் ராஜ் தான் வேலை செய்யும் கல்லூரியில் உள்ள நண்பர்களுக்கு … Read more

வேலூர் மத்திய சிறையில் முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் கடந்த 8ம்தேதி முதல் … Read more