சென்னையில் அதிகரிக்கும் தெரு நாய்கள்; மாநகராட்சி அதிரடி திட்டம்

Chennai Tamil News: சென்னையில் இரண்டு புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவிருக்கின்றனர். கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் (ஜிசிசி) ககன்தீப் சிங் பேடி தலைமையில் கால்நடை பொது சுகாதாரக் குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக் குறித்து ஆய்வு செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.  நகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, 2018 கணக்கெடுப்பில், சென்னையில் சுமார் 57,366 தெரு நாய்கள் உள்ளன. இங்கு தற்போது லாயிட்ஸ் … Read more

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபரில் இறுதி விசாரணை

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் … Read more

ஹாட்-ரிக் ஹிட் அடித்த ஸ்டாலின்… கடைசியில இப்படி ஆகிப்போச்சே!

திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கலைஞர் கருணாநிதி இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார் . ஆனால், சொந்தக்கட்சியான திமுக உட்கட்சித் தேர்தலை நடத்துவதில் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரே அப்செட் ஆகும் அளவுக்கு உடன்பிறப்புகள் அவருக்கு குடைச்சலை கொடுத்து வருவதாக தெரிகிறது. திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. … Read more

நீர்வரத்து 57 அயிரம் கன அடியானதால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கொடுத்த அனுமதி மீண்டும் ரத்து-மேட்டூர் அணைக்கும் வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது

பென்னாகரம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று காலை பரிசல் சவாரிக்கு கொடுத்த அனுமதி மாலையில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் ஆணைகளின் பாதுகாப்பு … Read more

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 41 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது – வானிலை மையம்

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக மாறி மீண்டும் தாழ்வு பகுதியாக வழுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை  இயல்பைவிட 41 சதவீதம் அதிகபடியான மழை பதிவாகியிருக்கிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Tamil news Today Live: ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 116-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 2024-ல் ககன்யான் திட்டம் உறுதி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 2024-ல் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்பட தெரிவித்தார். இந்தாண்டுக்குள் … Read more

குவைத், சவுதியில் 2 தமிழர்கள் உயிரிழப்பு | உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை தேவை – தினகரன்

சென்னை: குவைத், சவுதியில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இந்தியத் தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர், வேலைக்குச் சென்ற சில தினங்களிலேயே குவைத் நாட்டில், சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் … Read more

ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள் உள்பட … Read more

ஆரணி அடுத்த விளைசித்தேரி, துந்தரீகம்பட்டில் கி.பி.8 மற்றும் 10ம் நூற்றாண்டு கொற்றவை சிலைகள் கண்டெடுப்பு

ஆரணி :  ஆரணி அடுத்த விளைசித்தேரி, துந்தரீகம்பட்டு கிராமங்களில் கி.பி.8 மற்றும் 10ம் நூற்றாண்டு கொற்றவை, பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி – சேத்துப்பட்டு செல்லும் சாலையில்  விளைசித்தேரி, துந்தரீகம்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் மிக பழமையான  காளியம்மன் கோயில்  உள்ளது. இக்கோயிலில் பல்லவர் கால சிலைகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்புவராயர் ஆய்வு மைய பேராசிரியர் அ.அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆரணி ஆர்.விஜயன் ஆகியோர் ஆய்வு … Read more

தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் – திருவள்ளூர் அருகே பரபரப்பு!

பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் நள்ளிரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகம் உள்ளது. இதில், 4 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில், வேலம்மாள் பள்ளியில் வெடிகுண்டு … Read more