ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்த திருமாவளவன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் … Read more

மக்களுக்கு அடுத்த இடி..!! ஆம்னி பேருந்துகளின் புதிய கட்டண பட்டியல் வெளியீடு..!!

பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே நம்பி வருகின்றனர்.ஆனால் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு தொடங்குய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போகிறது.. இதனால் பேருந்து பயணத்தை நாடுகின்றனர். அதிலும், குறிப்பாகப் பயணத்தைப் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக அவ்வப்போது … Read more

“ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை” – அமைச்சர் பொன்முடி

சென்னை: ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள தகுதியுள்ள மாணவர்கள் 31 ஆயிரத்து … Read more

விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, நேற்று அவர்வெளியிட்ட செய்தி: ரத்த தானம் மூலம், விலை மதிப்பற்ற மனித உயிரைக் காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் முதல்நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய … Read more

ஓபிஎஸ் வழக்கை விசாரித்து முடிக்கும்வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், “பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் … Read more

அத்திமரப்பட்டி – குலையன்கரிசல் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதி

ஸ்பிக்நகர்: அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு வழியாக குலையன்கரிசல், கூட்டாம்புளி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை, கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் பல பகுதிகளில் புழுதிகள் பறப்பதால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். மழை நேரங்களில் சகதிகாடாக … Read more

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி நிகிதா ஸ்ரீ, 5 வயது சிறுமி சுப ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகள் … Read more

போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் உதவிகமிஷனர் உட்பட 37 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

மதுரை: மதுரையில் கடந்த 2019ல் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாஸ்போர்ட் அலுவலக அலுவலர்கள், தபால்துறையினர், போலீசார் உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் துவக்க கட்ட குற்றப்பத்திரிகை மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்டவர்களில் முகம்மது காசிம், கோமதி ஆகியோர் இறந்தனர்.இந்த வழக்கின் விசாரணை மாஜிஸ்திரேட் … Read more

“காலைச் சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவந்தது முதல்வர் ஸ்டாலின்தான்… அதிமுக அல்ல” – அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை: “காலைச் சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “பெண்களுக்கு எதிரான எந்த ஒரு புகார் கொடுத்தாலும் வழக்குகளை வேகப்படுத்தி முடிக்கும் வகையில் முதல்வர் உத்தரவிட்டு செயல்பட்டு வருகிறார். ஊட்டச்சத்து குறைப்பாடு இருக்க கூடாது என்பது முதல்வர், எங்களுக்கு கொடுத்த அறிவுரை. எனவே, குழந்தை உருவானது முதல் 1000 நாட்கள் வரை ஊட்டச்சத்துள்ள உணவு … Read more

புதுக்கோட்டையில் பத்திரப் பதிவு அலுவலக அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார்(55). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் பணியாற்றினார். அப்போது இவரது பதவியை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின்னர் தேனிக்கு இடமாறுதலில் சென்ற அஞ்சனகுமார், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு மாறுதலாகி மாவட்ட பதிவாளர் தணிக்கை பிரிவில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் நேற்று காலை  புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ். நகரில் … Read more