அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாயிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஒற்றைத் தலைமை விவாகரம் தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,  அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது எனவும், காவல்துறை போதிய … Read more

5 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர்-தனியார் நூற்பாளையில் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சேலத்தில், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர், தனியார் நூற்பாலையில் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், நான்கு நாட்களாக ஊழியர்கள் நடமாட்டம் இல்லாததால் இளைஞர் உயிரிழந்தது தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.   Source link

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கூடுதலாக 25,000 ஹெக்டேரில் நெல் நடவு: அமைச்சர் தகவல்

ஈரோடு: “மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால், இந்த ஆண்டு கூடுதலாக, 25,000 ஹெக்டேர் நிலத்தில் நெல் நடவு நடந்துள்ளது” என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களை … Read more

பராமரிப்பின்றி பாம்புகளின் கூடாரமாக மாறிவரும் ஆவடி மாநகராட்சி பூங்காக்கள்

ஆவடி மாநகராட்சியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 30-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு பூங்காவும் ரூ.40 லட்சம் முதல் 2 கோடி வரை மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள சிறுவர் பூங்கா, … Read more

மனைவி- மகளுடன் ரோகித் சர்மா: இங்கிலாந்து தீம் பார்க்கில் உற்சாகம்

Rohit Sharma Tamil News: கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்தாண்டு கொரோனா காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றது. இதில் முதலில் நடந்த கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் தொடர் 2-2 என்கிற கணக்கில் சமமானது. ஆதலால் இரு அணி வீரர்களும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர். பிறகு, தொடர்ந்து நடந்த 3 … Read more

ஸ்டாலினிடம் போனில் பேசியுள்ளேன், பா.ம.கவினருக்கு டாக்டர் ராமதாஸ் சொல்லும் செய்தி என்ன?

வன்னியர் சங்க 43 ஆவது ஆண்டு விழா முன்னிட்டு, சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்! என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மடல் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த மடலில்,  “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 42 ஆண்டுகளை நிறைவு செய்து, 43&ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.   சமூகநீதிக்காக … Read more

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம்: தொழில்முனைவோர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்

சென்னை: “சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்திடவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடவும் அனைத்து தொழில்முனைவோர்கள் முன் வரவேண்டும்” என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக விளங்கும் தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா … Read more

சிக்னல் கோளாறு… சென்னை முழுக்க ஆங்காங்கே நின்ற மின்சார ரயில்கள்

செங்கல்பட்டு- கடற்கரை ரயில் நிலையம் இடையே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரயில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. நேற்று இரவு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசிவந்தது. இதன் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மறுமார்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் … Read more

மேகதாது; காவிரி ஆணையம் விவாதிக்கலாம்; முடிவு எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேகதாது உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விசாரிக்க கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜராண மூத்த வழக்கறிஞர் வாதிட்டபோது,  மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கான நீரின் அளவு குறையும் என்பதை குறிப்பிட்டார். … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more