ஒரு மாத யானைக்குட்டியின் சடலம் கண்டெடுப்பு – கோவையில் தொடரும் சோகம்
கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் யானைக் குட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கெம்பனூர் சுற்று அட்டுக்கல் சரகத்துக்கு உட்பட்ட காப்பு வனப்பகுதியில் நேற்று மாலையில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அபபோது, பிறந்து சுமார் 1 மாத காலமே ஆன ஆண் யானைக்குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவலின்பேரில், கோவை வனச்சரக அலுவலர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். … Read more