'தொண்டர்கள் வர வேண்டாம்' – அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அறிவிப்புப் பலகை

சென்னை: வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தொண்டர்கள் வர வேண்டாம் என்று அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இந்த சீலை அகற்றக் கோரி … Read more

“இபிஎஸ் – ஓபிஎஸ் இடையேயான பிரிவு, அண்ணன் தம்பி பிரிவு போன்றது”– செல்லூர் ராஜூ பேச்சு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, “அதிமுகவில் இருந்து ஒரு தொண்டர் கூட பிரிந்து செல்லக் கூடாது. இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போன்றது” என பேசியுள்ளார். மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ, நிகழ்ச்சிக்குப் பின் … Read more

நாளை மாலை ஸ்ரீமதியின் இறுதி சடங்கு.? நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த மாணவியத்தின் பெற்றோர்.!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு உத்தரவு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது,  உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை நீதிபதி சதீஷ்குமார் முன்பு மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது, வழக்கு விசாரணையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தடவியல் நிபுணர் உடல் கூறாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், நீதிபதியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மரியா டிராகி!!

இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகிறன்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் மரியா டிராகிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெருன்பான்மை இல்லாததால் இன்று மரியோ டிராகி அதிபர் செர்ஜியோ மாட்ரெல்லா முன்னிலையில்  தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், … Read more

அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அமலாக்கத்துறையைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை மத்திய அரசின் அமலாக்கத்துறை, பழிவாங்கும் நோக்கத்துடன் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அமலாக்கத்துறையைக் கண்டித்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் … Read more

தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் விலை உயர்வு: புதிய விலை நிலவரம் இதோ!

கடந்த 18ஆம் தேதி , பால் பொருட்களான தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்டவற்றிற்கு 5% ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) விதித்துள்ளது இந்திய மத்திய அரசு. சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளதால் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிட்டெட், ஆவின்  தயாரிப்புகளான தயிர், நெய் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதற்குக் காரணம், மத்திய … Read more

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக பொது சுகாதார ஆய்வகம் முழு பயன்பாட்டுக்கு வருமா?

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள பொது சுகாதார ஆய்வகம் முழு பயன்பாட்டில் இல்லாததால், திருப்பூர் மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் பயன்படும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதாரம்மற்றும் நோய் தடுப்புத் துறை பிரிவின் கீழ், ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான ரத்தபரிசோதனைகள், தைராய்டு பரிசோதனைகள், வயிற்றுப் போக்கின் போது உடலில் குறையும் நீர்ச்சத்து குறைபாடு தொடர்பான பரிசோதனைகள், சிறுநீரகத் … Read more

ஒரு மாத யானைக்குட்டியின் சடலம் கண்டெடுப்பு – கோவையில் தொடரும் சோகம்

கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் யானைக் குட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கெம்பனூர் சுற்று அட்டுக்கல் சரகத்துக்கு உட்பட்ட காப்பு வனப்பகுதியில் நேற்று மாலையில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அபபோது, பிறந்து சுமார் 1 மாத காலமே ஆன ஆண் யானைக்குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவலின்பேரில், கோவை வனச்சரக அலுவலர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். … Read more

கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்: வட பழனியில் இருந்து செல்வது எப்படி?

Traffic diversion: Greater Chennai Traffic Police Tamil News: சென்னை கோயம்பேடு முதல் வடபழனி வரையிலான 100 அடி சாலையில் நாளை சனிக்கிழமை (ஜூலை 23) முதல் 10 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மைய தடுப்புசுவர் … Read more

கோயில்களில் களைகட்டிய ஆடி மாத திருவிழா: ஓசூர் சாமந்திப்பூவுக்கு சந்தையில் வரவேற்பு

கோயில்களில் ஆடி மாத திருவிழா களை கட்டியுள்ள நிலையில், ஓசூர் சாமந்திப்பூவுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், வரும் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், பூக்கள் தேவை அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலர் உற்பத்திக்கு சாதகமான குளிர்ந்த தட்ப வெட்ப நிலை மற்றும் மண்வளம் உள்ளது. இதனால், இப்பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்திப்பூ சாகுபடி செய்துள்ளனர். … Read more