தமிழகத்தில் இன்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று; சென்னையில் 223 பேருக்கு பாதிப்பு- 3,172 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,44,929. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,91,011. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர். சென்னையில் 223 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டிக்கேட்க முயன்ற தந்தை – மகளுக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டி கேட்ட முதியவரை சராமாரியாக தாக்கியுள்ளார் அந்த இளைஞர். இதை தடுக்க சென்ற இளம் பெண் ஒருவரும் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார். 55 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்திருக்கிறார். இன்று மதியம் இதே பகுதியை … Read more

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை உருவாக்குவது எப்படி?

மக்களின் பெரும் எதிர்பார்ப்பான புத்தக கண்காட்சி சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னையின் 45ஆவது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கிவைத்தார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் முன்னிலையில் அழ. வள்ளியப்பா நூற்றாண்டுக்கு கொண்டாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. குழந்தை இலக்கியங்களுக்கே பிரபலமான கவிஞர் அழ வள்ளியப்பா, 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் குழந்தைகளுக்காகவே எழுதியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஐ.ஏ.எஸ். இளம்பகவத் வருகை தந்தார். … Read more

பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

செங்கல்பட்டு அருகே இரவோடு இரவாக மர்மநபர்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். மேலும், கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை … Read more

தமிழகத்தில் ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று <!– தமிழகத்தில் ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று –>

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் மேலும் 223 பேருக்கும், கோவையில் மேலும் 136 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3 ஆயிரத்து 172 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், … Read more

பிப்ரவரி 20: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,44,929 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

திருப்பதி கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக் கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கல்யாண உற்சவ … Read more

தேர்தல் முறைகேடு; வாக்கு எண்ணிக்கையை நிறுத்தகோரி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு ம.நீ.ம ஆர்ப்பாட்டம்

MNM protest in front SEC to stop vote counting: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் நீதி மய்யம், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு அளித்துள்ளது. தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், … Read more

குடும்ப தகராற்றால் செவிலியர் அடித்து கொலையா? காவல்துறை தீவிர விசாரணை..!

செவிலியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் வயிறு வரை சேர்ந்தவர் வளர்மதி இவர் அரசு துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் அங்குள்ள விவசாய நிலம் ஒன்றில் உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவ்வழியே சென்ற மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை … Read more

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் <!– தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் அமைதியான வாக்குப்பதிவு … –>

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இதுவரை இல்லாத வகையில் அமைதியாக நடைபெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடியரசு நாளுக்குத் தமிழகம் சார்பில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த ஊர்திகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் குடிசைப் பகுதி மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதைப் போல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் மக்களும் … Read more