லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்ற சென்னை என்ஜினீயர்

அபுதாபி, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஸ்ரீராம் ராஜகோபாலன் ரூ.230 கோடி பரிசு வென்றார். அவர் தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16ம் தேதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக அவர் சிலாகித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “நான் முதலில் அதை நம்பவில்லை. நான் டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன், வென்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன். முதலில் என் கண்ணையே … Read more

“ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்” – டொனால்டு ட்ரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்து வருகிறேன். அவை இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது. இது … Read more

இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்

டோக்கியோ, ஜப்பானில் 54 வயதான கார் டிரைவர் ஒருவர் போதைபொருட்கள் கொடுத்து 50 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு இவரது காரில் டோக்கியோவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரிடம் நைசாக பேச்சுகொடுத்தார். பின்னர் இரட்டை அர்த்தத்தில் பேசி அந்த பெண்ணிற்கு கார் டிரைவர் தூக்க மாத்திரையுடன் போதைப்பொருளையும் கொடுத்தார். அதை சாப்பிட்ட … Read more

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியது ஏன்? – சர்வதேச நாணய நிதியம் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (IMF) நியாயப்படுத்தியுள்ளது. இந்த கடன் தவணையைப் பெறுவதற்கு தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஎம்எப்-ன் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக், “பாகிஸ்தான் உண்மையில் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாக எங்கள் வாரியம் கண்டறிந்துள்ளது. அது சில சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால்தான், வாரியம் முன்னோக்கிச் சென்று நிதி … Read more

'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' – மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் மொத்தம் உள்ள 60 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் சீனர்கள் உள்ளனர். அவர்கள் மாண்டரின் மொழியை பேசுகின்றனர். அது தவிர மலாய் மக்கள் 15 சதவீதம் பேரும், இந்தியர்கள் சுமார் 7 சதவீதம் பேரும் உள்ளனர். அவர்கள் மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை பேசுகின்றனர். மாண்டரின், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளும் சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். இதில் தமிழ் மொழி சிங்கப்பூரில் பரவலாக … Read more

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் 2 பேர் சுட்டு கொலை

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் உள்ள யூதர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் யூதர்​கள் பங்​கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா​வுக்​கான இஸ்​ரேல் தூதரக அதி​காரி​களும், ஊழியர்​களும் பங்​கேற்​றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனை​வரும் அருங்​காட்​சி​யகத்தை விட்டு வெளியே வந்​தனர். அப்​போது இஸ்​ரேல் தூதரக அதி​காரி​கள், ஊழியர்​களும் வெளியே வந்து வீட்​டுக்​குச் செல்ல ஆயத்​த​மாகி நின்​றனர். அப்​போது அருங்​காட்​சி​யகத்​துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒரு​வர் தூதரக ஊழியர்​களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்​கி​யால் … Read more

தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் – வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்! 

டாக்கா: வங்கதேசத்தில் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ், அனைத்து கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்கவில்லை என்றால் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். அதிகாரத்தை தக்கவைக்கும் வகையில் போராட்டத்தை தூண்டுவதற்கான ஒரு சூழ்ச்சியாக யூனுஸின் ராஜினாமா வதந்தி பார்க்கப்படுகிறது. வேலை இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் தலைமையிலான போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கமாக மாறி, ஆகஸ்ட் … Read more

உல​கின் எந்த பகு​தி​யிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை வெற்றி

கலிபோர்னியா: உலகின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் மினிட்மேன்-3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. அமெரிக்கா கடந்த 1970-ம் ஆண்டே மினிட்மேன் ஏவுகணை திட்டத்தை கொண்டு வந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் படைத்தது. இந்நிலையில் மினிட்மேன்-3 ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று சோதனை செய்தது. இதில் ஆயுதம் இல்லை. இந்த ஏவுகணை மூலம், … Read more

‘சிந்து நதி நீரை நிறுத்தினால்…’ – பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கு மிரட்டல்

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயன்படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அகமது ஷெரீப் சவுத்ரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை … Read more

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம். இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஹாவர்டு பல்கலைக்கழகம். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு உயர்கல்வி பயில்கின்றனர். அடுத்த தலைமுறை மாணவர்கள் இங்கு பயிலவும் விரும்புகின்றனர். இந்தச் சூழலில்தான் ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான … Read more