ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம். இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஹாவர்டு பல்கலைக்கழகம். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு உயர்கல்வி பயில்கின்றனர். அடுத்த தலைமுறை மாணவர்கள் இங்கு பயிலவும் விரும்புகின்றனர். இந்தச் சூழலில்தான் ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான … Read more

வெள்ளையருக்கு எதிராக இனப்படுகொலை: தென்னாப்பிரிக்க அதிபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, தொழிலதிபர் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அதிபர் சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். இருப்பினும், தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை அதிபர் ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டிகூறி வருகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ராமபோசா தொடர்ந்து மறுத்து வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் … Read more

அணு ஆயுத ஏவுகணை ஏவி அமெரிக்கா சோதனை

வாஷிங்டன், அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணை ஏவி சோதனை மேற்கொண்டு உள்ளது. அணு சக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது. கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்தில் இருந்து மார்ஷல் தீவுக்கு இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 15 ஆயிரம் … Read more

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் பயங்கரவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறியுள்ளார்.இந்த விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: துப்பாக்கி சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திய நபரை கைது செய்த போது, பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று … Read more

'வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை' – டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தில், யூத அருங்காட்சியகத்திற்கு அருகே நடந்த தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாலஸ்தீன ஆதரவு நபர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “யூத எதிர்ப்பு பயங்கரவாதம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. … Read more

கிரீசில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஏதென்ஸ், கிரீசில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.49 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 25.79 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் … Read more

இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள்

இஸ்லாமாபாத்: இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்காக இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க வேண்டும் என்று 49% பாகிஸ்தானியர்கள் தெரிவித்திருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இம்மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள் … Read more

வெள்ளை இன மக்கள் படுகொலை… தென்ஆப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதம்

வாஷிங்டன் டி.சி., தென்ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடனான வாய்ப்புகள் பற்றி ஆலோசிப்பதற்காக சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். எனினும் தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டாக கூறி வருகிறார். ஆனால், இதனை ராமபோசா மறுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். … Read more

‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்

புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார் நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக … Read more

இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம்: பாகிஸ்தான் பதில் நடவடிக்கை

இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நடவடிக்கை … Read more