பல நகரங்களில் தளர்வுகள் அறிவிப்பு| Dinamalar

பீஜிங்: கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, பல நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தொடர்ந்து கோவிட் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உரும்குயி நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.64 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,643,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

ஹிட்லர் சிறந்த மனிதர்; இஸ்ரேல் தூதருக்கு அனுப்பப்பட்ட பதிவால் சர்ச்சை.!

கோவாவில் நடந்த ந53ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான நடாவ் லபிட், ‘“தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திரைப்படத்தை விமர்சித்த அவரது கருத்து, … Read more

ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தேவையை தடுக்க முடியாது: புடின் பதிலடி| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்க விரும்புபவர்களை தொடர்ந்து ஆதரிப்போம் எனக்கூறியுள்ள அந்நாட்டு அதிபர் புடின், சர்வதேச சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெயின் தேவையை யாராலும் தடுக்க முடியாது எனக்கூறியுள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு கட்டுப்பாடு விதிக்கவும், வருமானத்தை குறைக்கவும் முடிவு செய்துள்ள ஜி7 நாடுகள், அதற்காக ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலர் ஆக கட்டுப்படுத்த முடிவு … Read more

அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை… தந்தையும் படுகாயம்!

மலேசியா நாட்டில் சபா மாகாணத்தின் லகட் தாட்டு என்ற கடலோர பகுதியில் உள்ள ஆற்றில், தன்னுடைய சிறு படகில் தனது ஒரு வயது மகன் உடன் ஒருவர் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது, படகை திடீரென முதலை ஒன்று தாக்கியுள்ளது. முதலை தாக்குதலின்போது, அந்த இளைஞரும் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அவரால் முதலையை தாக்குபிடிக்க முடியவில்லை என தெரிகிறது. தலையில் கடும் பற்தடுங்களுடன் பல்வேறு காயங்களுடன் அவர் ஆற்றில் கவிழ்ந்தார். கரை சேர்ந்த அவரை அப்பகுதியினர் மீட்டனர். ஆனால், … Read more

இந்தியா என்னில் ஒரு பகுதி: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி!

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு … Read more

ஜோடியுடன் ஜாலியாக வாழும் உலகின் மிக வயதான ஆமை… எத்தனை வயது தெரியுமா?

இங்கிலாந்தின் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள செயின்ட் ஹெலினாவில்தான், பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் 1821ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்டு உயிரிழந்தார். அதே இடத்தில்தான் ஜொனாதன் என்ற ராட்சத ஆமையும் தற்போது வசித்து வருகிறது. ஜொனாதன், 1832ஆம் ஆண்டு பிறந்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அதன் பின் 50 வருடங்கள் கழித்துதான் கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்ஸில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது.  இந்நிலையில், ஜொனாதன் தற்போது தனது 190ஆவது பிறந்த ஆண்டை அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், தற்போது … Read more

FIFA World Cup 2022 : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதப்போவது யார் யார்? – முழு விவரம்

கத்தார் நாட்டில் கடந்த நவ. 20ஆம் தேதியில் இருந்து பிபா உலகக்கோப்பை 2022 தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றில் 32 அணிகள், ஒரு குரூப்புக்கு 4 அணிகள் வீதம், 8 குரூப் பிரிக்கப்பட்டன. இதில், குரூப்பில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முந்தைய சுற்றான, ரவுண்ட் ஆப் 16இல் மோதிக்கொள்ளும்.  இந்நிலையில், பிபா உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்தது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளான அர்ஜென்டீனா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், … Read more

ஐ.நா., தலைமை அலுவலகத்தில் மஹாத்மா காந்தி சிலை 14ல் திறப்பு| Dinamalar

நியூயார்க், ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகத்தில், மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்து உள்ளது. இங்கு அமைக்கப்பட்டு உள்ள மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலையை, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் 14ம் தேதி திறந்து வைக்கின்றனர். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு, சுழற்சி முறையில் மாதந்தோறும் ஒரு … Read more

  மாற்றி்க்காட்டிய மாற்றுதிறனாளிகளை போற்றி புகழ்வோம் : இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்| Dinamalar

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள்.. உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். உலகில் ஐந்தில் ஒரு பெண், பத்தில் ஒரு சிறுவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால் … Read more