வெள்ளை இன மக்கள் படுகொலை… தென்ஆப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதம்

வாஷிங்டன் டி.சி., தென்ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடனான வாய்ப்புகள் பற்றி ஆலோசிப்பதற்காக சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். எனினும் தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டாக கூறி வருகிறார். ஆனால், இதனை ராமபோசா மறுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். … Read more

‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்

புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார் நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக … Read more

இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம்: பாகிஸ்தான் பதில் நடவடிக்கை

இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நடவடிக்கை … Read more

‘இந்தியா – பாக். மோதலை தீர்த்துவைத்தது நான்தான்’ – மீண்டும் மீண்டும் சொல்லும் ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தால், நாங்கள் அந்த மோதலை முழுவதுமாக தீர்த்து வைத்தோம். நான் அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன். அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் பெரிய ஒப்பந்தம் செய்து வருகிறது. … Read more

மர்மமான முறையில் படுகாயம் அடைந்த ‘லஷ்கர்’ முக்கிய தீவிரவாதி மருத்துவமனையில் அனுமதி

இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனரும், லஷ்கர் பத்திரிகைகளின் ஆசிரியருமான அமீர் ஹம்சா (66) அவரது வீட்டில் மர்மமான முறையில் படுகாயம் அடைந்து லாகூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹம்சா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தற்போது ஐஎஸ்ஐ-.யின் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் இயக்கத்தில் உயர் பதவி வகித்தவரும், அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தவருமான அபு சைபுல்லா பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் மூன்று நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த … Read more

அமெரிக்காவை பாதுகாக்க ரூ.15 லட்சம் கோடியில் ‘கோல்டன் டோம்’ ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ” கோல்டன் டோம்” திட்டம் 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் கூறியதாவது: வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில் ” கோல்டன் டோம்” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 175 பில்லியன் டாலர் செலவு … Read more

பாகிஸ்தான்: பள்ளி பஸ்சை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – 5 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டம் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றுகொண்டிருந்தது. மலைப்பகுதி அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 3 பள்ளிக்குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த … Read more

காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!

காசா: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் உதவிகள் வரத் தொடங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், தேவைப்படும் புதிய பொருள்கள் இன்னும் மக்களைச் சென்று சேரவில்லை என்றும், மூன்று மாதங்களாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில், சுமார் 20 லட்சம் மக்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹமாஸ்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக காசாவுக்குள் உணவு, மருந்து பொருள்கள் மற்றும் எரி பொருள்கள் செல்லுவதை இஸ்ரேல் தடுத்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு … Read more

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து; வேளாண் துறை மந்திரி ராஜினாமா

டோக்கியோ, ஜப்பான் வேளாண் துறை மந்திரி டகு இடொ. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகச்சியில் பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் என்றார். இதனிடையே, ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் மந்திரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜுலை மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் … Read more

விண்வெளியில் இருந்து தாக்கினாலும் பாதுகாப்பு… கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. இதுதவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, குடியரசு கட்சி உறுப்பினரான அமெரிக்காவின் 40-வது ஜனாதிபதி ரொனால்டு ரீகன் இதனை … Read more