உலகக்கோப்பை கால்பந்து : சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி.. மெஸ்சி மட்டும் கோல் அடித்தார்..!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் அர்ஜென்டினா அணி, சவுதி அரேபியா அணியிடம் தோல்வியுற்றது. கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 10ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் அந்த அணி 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது பாதியில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து சவுதி அரேபியா முன்னிலை பெற்றது. அதன் பின்னர் சவுதி அரேபியா வீரர்கள், எதிரணியின் … Read more

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்- பூமியை படம் பிடித்து அனுப்பியது

வாஷிங்டன் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண் வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது. ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் … Read more

தாய்லாந்தில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் காவலர் ஒருவர் பலி..!

தாய்லாந்தில், காவல் நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், ஒரு காவலர் உயிரிழந்த நிலையில் 29 பேர் காயமடைந்தனர். தாய்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள Muang மாவட்டத்தில், காவல்நிலையம் அருகே குண்டுவெடித்த நிலையில், காயமடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் தாய்லாந்து மாகாணங்களில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சுதந்திரம் கோரி கிளர்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. Source link

பா.ஜ., ஆட்சி இருக்கும்வரை இந்தியா – பாக்., நல்லுறவுக்கு வாய்ப்பே இல்லை: இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் தேசியவாத நிலைபாட்டை பா.ஜ., ஆட்சியில் இருக்கும்வரை இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பு இல்லை என பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் காஷ்மீர் பிரச்னை முக்கிய தடையாக இருந்தது. இப்பிரச்னையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். … Read more

சீனாவில் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்: பொருளாதார பாதிப்பு ஏற்படலாம் என அச்சம்

பெய்ஜிங், சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக ஜிரோ கோவிட் பாலிசியை பின்பற்றும் சீனா, மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முடக்கி வருகிறது. இதனால், தொழில் நடவடிக்கைகளும் முடங்கியிருக்கின்றன. சீனாவில் தொழில்துறையில் ஏற்பட்டு இருக்கும் தொய்வு ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சர்வதேச வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் மக்களின் தேவைகள் குறைந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. … Read more

ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து 10,000 பேரை பணி நீக்கம் செய்யும் கூகுள்!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்போது கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ட்விட்டர், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை பணி நீக்கம் செய்துள்ளன. இந்நிலையில், கூகுள் குறைந்தது 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனம் தனது புதிய ரேட்டிங் முறையை பயன்படுத்தி ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த … Read more

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 252 ஆக அதிகரிப்பு

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய அரசு வெளியிட்ட தகவல்: மேற்கு ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகியது. ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக காணப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் … Read more

தொடரை கைப்பற்றியது இந்திய அணி| Dinamalar

நேப்பியர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ‛டி-20′ போட்டி ‛டக்வொர்த் லூயிஸ்’ முறைப்படி ‛டை’ ஆனதால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டி-20′ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதுகிறது. முதல் ‛டி-20′ மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று (நவ.,22) நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் … Read more

புரூஸ் லீ உயிரை பறித்த தண்ணீர் – அதிகளவு தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

வாஷிங்டன், தற்காப்பு கலை ஜாம்பவான் மற்றும் பிரபல நடிகரான புரூஸ் லீ தனது 32வது வயதில் உலகிலிருந்து விடைபெற்றார். இப்போது புரூஸ் லீ மரணம் குறித்து ஆச்சரியப்படும் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் ஒரு புதிய ஆய்வில், புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என்று சில மருத்துவர்கள் கூறியுள்ளனர். நடிகர் புரூஸ் லீ ஜூலை 1973 இல் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். அப்போது, ​​வலிநிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டதாக … Read more

நியூசிலாந்தில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு? – அரசு எடுக்கும் அதிரடி முடிவு!

“நியூசிலாந்து நாட்டில் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்,” என, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்து உள்ளார். தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயது, 18 ஆக இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் வயது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், 16 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்காதது வயது … Read more