உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்குவோம் – அமெரிக்கா அறிவிப்பு

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம். “நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா எங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக … Read more

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் முறைப்படி ரஷ்யாவுடன் இணைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ் : உக்ரைனில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரகடனப்படுத்தினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியாவை தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது. இந்த பிராந்தியங்கள் … Read more

ஆப்கன் குண்டு வெடிப்பு19 பேர் உடல் சிதறி பலி| Dinamalar

காபூல் :ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மனித வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தலைநகர் காபூலில் தஷ்டி பர்சி பகுதியில், அந்நாட்டின் சிறுபான்மையினரான ஹஸாராஸ் எனப்படும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு, … Read more

உக்ரைனின் லுஹான்ஸ்க் உட்பட 4 நகரங்கள் ரஷ்யா உடன் இணைப்பு – புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், … Read more

4 பகுதிகளை இணைத்த ரஷ்யா – 'நேட்டோ'வில் சேர உக்ரைன் அவசரம்!

நேட்டோ அமைப்பில் சேருவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தை, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமர்ப்பித்து உள்ளார். சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து விலகி உக்ரைன் தனி நாடானது. எனினும், அந்நாட்டின் மக்களின் மொழி, கலாச்சாரம், பண்புகள் உட்பட அனைத்தும் ரஷ்யா உடன் ஒத்துப் போவதால், அந்நாட்டை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே, ரஷ்யா கருதி வருகிறது. இதற்கிடையே, நடப்பு ஆண்டு தொடக்கத்தில், பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் நாடு விருப்பம் … Read more

பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்

பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார். அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது அரசு கவிழ்ப்பில், … Read more

Russia – Ukraine War: உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பதா..? – ரஷ்யாவுக்கு ஐ.நா கண்டனம்!

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை என, ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அண்டை நாடான ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, உக்ரைனில் … Read more

ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். ஆப்கானிதானின் தலைநகர் காபூலில் மேற்குப் பகுதியில் கல்வி நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தேர்வுக்காக மாணவர்கள் படித்து கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பலியானவர்களில் பலரும் மாணவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். … Read more

புளோரிடாவை தாக்கிய இயான் புயலால் மாகாணம் முழுவதும் கடுமையான பாதிப்பு..!

அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய இயான் புயலால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சுவதாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இயான் புயல் நேற்று முன்தினம் புளோரிடாவை தாக்கியது இதனால் நகர் முழுவதும்  வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது மேலும் மின்சாரம் தடைபட்டுள்ளதால் இருளில் முழ்கியுள்ளது . புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக புளோரிடா மாகாண கவர்னர் ரான் … Read more

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

யாங்கூன், மியான்மரில் இன்று காலை 3.52 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. பர்மாவின் வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : மியான்மர் … Read more