துருக்கி – ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 7 பேர் உயிரிழப்பு

வடமேற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  கோய் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கின. மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளிலும், தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பயங்கர நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்திற்கு … Read more

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி… ஒரே மாதத்தில் 4-ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி க்ரெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரே மாதத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட நான்காவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். Source link

பாகிஸ்தானின் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு| Earthquake in Pakistan: 4.1 on the Richter scale

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று(ஜன.,29) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று(ஜன.,29) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 10 முறையாக சாம்பியன்| Aussie Open: Djokovic champ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் அசத்திய செர்பிய வீரர் ஜோகோவிச் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விறுவிறுப்பான பைனலில் 6-3, 7-6, 7-6 என, கிரீசின் சிட்சிபாசை தோற்கடித்தார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-4’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். … Read more

வேல்ஸ் இளவரசி டயானா அணிந்த கவுன் ஏலம்… எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனை

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானா-வின் ஆடை, இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. ஆயிரக்கணக்கான முத்துகள், பட்டு இழைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த கவுன் 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளதாக கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் தெரிவித்துள்ளது. Source … Read more

நேர்காணலின் போதே பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆட்சேர்ப்பு பணியாளர்

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆட்சேர்ப்பு பணியாளர் ஒருவர், ஊழியர்களுக்கான நேர்காணலின்போதே பணிநீக்கம் செய்யப்பட்டார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தில் ஆட்சேர்ப்புப் பணியாளராக இருந்த டான் லானிகன் ரியான் என்பவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுடன் தொலைபேசியில் நேர்காணல் நடத்தியபோது, திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டு பணிநீக்க தகவல் தெரிவிக்கப்பட்டதாக லிங்க்டினில் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு… விஞ்ஞானிகள் தகவல்

4 புள்ளி 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து வெளியான விண்கற்களால் பூமியில் உயிரினங்கள் உண்டானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், விண்கற்களில் பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர். இவ்விரு தனிமங்களும் ஆவியாகும் தன்மை என்பதால், குறைந்த வெப்பநிலையில் இரண்டும் நீராவியாக மாறும் தன்மை கொண்டவை என தெரிவித்துள்ளனர். எனவே 4 புள்ளி 6 பில்லியன் … Read more

பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடி திருவிழா கோலாகலம்.. பாரம்பரிய உடையணிந்து மக்கள் ஊர்வலம்

பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தீய சக்திகளை விரட்டும் விதமாகவும், மக்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாகவும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. விழாவையொட்டி பெர்னிக் நகரில், பாரம்பரிய உடைகள், விலங்குகளின் உரோமங்களால் ஆன உடைகளை அணிந்து முகமூடியுடன் வந்த நடனக் கலைஞர்கள் டிரம்ஸ் இசைத்தபடி ஊர்வலமாக சென்றனர்.. கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. இதில் அல்பேனியா, இத்தாலி, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு … Read more

2023ல் இந்தியர்களுக்கு அதிக விசா: அமெரிக்க தூதரகம் முடிவு| The US Embassy has decided to approve visas for a large number of Indians in 2023

வாஷிங்டன் : 2023ல் அதிக எண்ணிக்கையில் இந்தயர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜான் பல்லார்ட் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், கடந்த ஆண்டில் 8 லட்சம் விசாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஆண்டில் இன்னும் அதிக விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கதிட்டமிட்டுள்ளோம். அதேபோல், முதல் முறையாக பி1, பி2 சுற்றுலா மற்றும் தொழில்முறை பயண விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காத்திருப்புக் காலம் குறைக்கப்படுகிறது. … Read more

ஜெருசலேமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தங்களின் பதில் வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் – இஸ்ரேல் பிரதமர்!

ஜெருசலேமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் பதில் வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் உள்ள யூதர்களின் ஆலயத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், தங்களை யார் காயப்படுத்த முயன்றாலும், அவர்களையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் தாங்கள் காயப்படுத்துவோம் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். Source link