பாகிஸ்தான் பெருவெள்ளத்தில் 8 அணைகள் உடைப்பு.. வெள்ள நீர் ஊரைச் சூறையாடியதில் பெண்கள் உள்பட 57 பேர் பலி..!

தெற்கு பாகிஸ்தானின் பாலூசிஸ்தான் மாகாணத்தில் கனமழை பெருவெள்ளத்தில் 8 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 57 பேர் உயிரிழந்தனர். விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயம் அடைந்தனர். கனமழை பெருவெள்ளத்தில் அணைகளின் மதகுகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடித்துச் செல்லப்பட்டதில் 57 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.  Source link

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு

இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 4 மாதத்திற்கும் மேலாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   Source … Read more

இலங்கையில் 2 மந்திரிகள் ராஜினாமா

கொழும்பு, பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். கொழும்பில் நடந்த அமைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய … Read more

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி – அமெரிக்கா

உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இந்த தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 150-ஆவது நாளை நெருங்கியுள்ள நிலையில், லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற தாக்குதல்களை … Read more

ஷின்ஜோ அபே படுகொலை: போப் ஆண்டவர் இரங்கல்

வாடிகன் சிட்டி, ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷின்ஜோ அபே சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஷின்ஜோ அபே படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஷின்ஜோ அபே படுகொலையை அறிந்து … Read more

ஆஸ்திரேலியா நட்புஷ் நடன விழாவில் ஒரே நேரத்தில் 4,084 பேர் நடனமாடி உலக சாதனை..!

ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேச நடனம் என கூறப்படும் Nutbush நடன விழாவில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டு உலக சாதனை படைக்கப்பட்டது. ரெட் பாஷ் இசைத் திருவிழாவில் அமெரிக்க பாடகி டினா டர்னரின், சுதந்திர பாடலுக்கு முல்லட், குட்டை பாவாடையான டூடஸ், டைனோசர், உள்ளிட்ட வேடமிட்டு மக்கள் Nutbush நடனமாடினர். ஏறத்தாழ 4 ஆயிரத்து 84 பேர் ஒரே இடத்தில் கூடி நடனமாடி உலக சாதனை படைக்கப்பட்டது. Source link

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம் – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

கீவ், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கப்படுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்தியா,ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தூதர்களின் பதவிநீக்கத்திற்கான காரணம் குறித்தும் அவர்களுக்கு புதிய பணிகள் வழங்கப்படுவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : உக்ரைன் தூதர்கள் நீக்கம்

இலங்கையில் பதற்றம் : அடுத்தடுத்து அமைச்சர்கள் விலகல்.. அடுத்த அதிபர் யார்?

இலங்கையில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி கோத்தபய விலகுகிறார். தற்காலிக அதிபராக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தன செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்புகள், பொது மக்கள் மீது தண்ணீர் … Read more

நியூசிலாந்தில் நுழைந்தது, குரங்கு அம்மை நோய் பாதிப்பு

ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், … Read more

55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு

வெலிங்டன், ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு சென்று … Read more