4 நாட்கள் வேலை வாரம் திட்டம் இங்கிலாந்தில் அமல்

நான்கு நாட்கள் வேலை வாரம் திட்டத்தை சோதனை அடிப்படையில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தி உள்ளது. 70 நிறுவனங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்து 300 தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை வாரத் திட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், மன அழுத்தம், சோர்வு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் திருப்தி உள்ளிட்டவைகளை கூடுதல் நாள் விடுமுறை மூலம் பணியாளர்கள் கையாள்வதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  Source link

"பதவியை விட்டு வெளியேற முடியாது" – அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டம்

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி … Read more

இயற்கையால் ஈர்க்கப்பட்டு மாறிய வாழ்க்கை.. போதை மருந்து விற்றவர் பறவைகள் காப்பாளராக மாறினார்..!

அமெரிக்காவில் போதை மருந்து விற்றவர் வனவிலங்குகளை குணப்படுத்தும் நிபுணராக மாறியுள்ளார். ஸ்டாட்ஸ் என்ற பெயருடைய அந்த 51 வயது மனிதர் அனகோஸ்டியா என்ற நதியை துய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது இயற்கையின் அற்புத சக்தியின் பால் ஈர்க்கப்பட்டு பறவைகளை காக்கும் செயலில் ஈடுபட்டார். இதுவே அவர் சிறந்த பறவை காப்பாளாராக உருவெடுக்க வாய்ப்பாக அமைந்தது. போதைப் பொருள் விற்பவராக சுற்றித்திரிந்த அவர் தற்போது பருந்துகளுக்கு பாதுகாவலராக திகழ்ந்து வருகிறார். Source link

வங்கதேச தீ விபத்து; மரபணு மாதிரி சேகரிப்பு| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில், ரசாயன கிடங்கு தீ விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரி சேகரிக்கும் பணி துவங்கிஉள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிட்டகாங் துறைமுகம் அருகே உள்ள ரசாயன கிடங்கில், மூன்று தினங்களுக்கு முன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 49 பேர் உயிரிழந்தனர்; 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில், 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் … Read more

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு 53.57 கோடியாக உயர்வு; 63.21 லட்சம் பேர் உயிரிழப்பு!

நியூயார்க், கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 57 லட்சத்து 61 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக … Read more

'மதவெறியை ஊக்குவிக்காதீர்கள்' – இந்தியாவுக்கு தலிபான் அரசு அறிவுரை

“மதவெறியை ஊக்குவித்து முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்” என இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவுரை கூறியுள்ளது. கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. அப்போது அவர், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சர்ச்சைகுரிய ட்வீட்டை பதிவிட்டார். பின்னர் அந்த கருத்தை நீக்கினார். இதனைக் கண்டித்து கான்பூரில் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி!

இங்கிலாந்து பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டனில் உள்ள பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து விருந்து நடத்தியதாக போரிஸ் ஜான்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது சர்ச்சையான நிலையில், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் … Read more

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விபத்துகுள்ளான கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

கொலம்பியாவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விபத்துகுள்ளான கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய கடற்படை அதிகாரிகள், கடந்த 1708-ம் ஆண்டு கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கேலியன் கப்பலில் மேற்கொண்ட ஆய்வில், தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தங்க நாணயங்கள், பீரங்கிகள் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கப்பலை மேலே கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுள்ளனர். Source link

'ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் வெளியேறவில்லை' – ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி பற்றி அமெரிக்கா புதிய தகவல்

வாஷிங்டன்: தலிபான்களுக்கு அஞ்சி பெட்டி, பெட்டியாக பணத்துடன் வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மீது இன்றளவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் அவ்வாறாக செய்யவில்லை என்று அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு ஒன்று சொல்லியுள்ளது. தி ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஃபார் ஆப்கானிஸ்தான் ரீகன்ஸ்ட்ரக்ஷன் The Special Inspector General for Afghanistan Reconstruction (SIGAR) தனது ஆய்வறிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 2021 அன்று அஷ்ரப் … Read more

உயிர்காக்கும் மருந்து இலங்கைக்கு உதவி| Dinamalar

கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து அரிசி பால் பவுடர் மருந்துகள் மீனவர்களுக்கு டீசல் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிலையில் அம்பந்தோட்டா யாழ்ப்பானம் கிளிநொச்சி வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ உபகரணங்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நேற்று … Read more