அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுகட்ட அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.   2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது. துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன், அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தார். அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தைக் கொண்டுவர வழிகாட்டுமாறு ஜெசிந்தாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார். Source … Read more

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் … Read more

மெக்சிகோவை புரட்டி எடுத்த சூறாவளி ; 10 பேர் பலி – 20 பேர் மாயம்

மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டை நேற்று சூறாவளி புயல் இன்று தாக்கியது. அஹதா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தை தாக்கியது. கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் … Read more

ஆஸ்திரேலிய அமைச்சரவையில் புதிய சாதனை.!

ஆஸ்திரேலியாவில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பேனிஸ் வெற்றிபெற்று கடந்த மாதம் 23-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அவரது அமைச்சரவையில் மொத்தம் உள்ள 23 பேரில் பெண்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் அதிகபட்சமாக 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.  Source link

குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது

லண்டன்: கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி  வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.  கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. … Read more

உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அனுப்பும் அமெரிக்கா – ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100-வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா … Read more

உக்ரைன் படையெடுப்பு – ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை..!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 97 நாட்களை எட்டிய நிலையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடையை அறிவித்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதிகளுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி விடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது.ஒரு பேரல் கச்சா எண்ணெய் 122 புள்ளி 84 டாலருக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.  Source link

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கையில் வரிகள் உயர்வு- அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது. … Read more

அதிக ஊதியம் பெற்ற சிஇஓ-க்களில் எலான் மஸ்க் முதலிடம் : 7-வது இடத்தில் இந்தியர்- யார் தெரியுமா ?

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறினார். ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் பின்னர் நடைபெறவில்லை. ஆனால் டுவிட்டரின் 9.2% பங்குகளை வைத்திருக்கும் அவர் தற்போது நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் … Read more

உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நீண்ட தூர ராக்கெட்டுகளை வழங்குகிறது அமெரிக்கா..!

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் HIMARS வகை ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்குகிறது. ரஷ்யா படையெடுப்பு 100-வது நாளை எட்டிய நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை அமெரிக்கா வழங்குகிறது. புதிய தொகுப்பில் ரஷ்ய எல்லைகளை தாக்கி அழிக்கக் கூடிய நீண்ட தூர ராக்கெடுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்துள்ளது. ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்த மறுநாளே … Read more