நேபாள விமான விபத்து: 21 உடல்கள் மீட்பு| Dinamalar

காத்மாண்டு : நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் இழந்தோரில், 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், நேற்று முன்தினம், பொகாரா நகரில் இருந்து, இந்தியர்கள் நான்கு பேர் உட்பட, 22 பேருடன் சுற்றுலா தலமான, ஜாம்சம் நோக்கி தாரா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த விமானம் … Read more

சீன மக்கள் தொகை 2100ல் பாதியாகும்| Dinamalar

மெல்போர்ன் : சீனாவில் தற்போதுள்ள மக்கள் தொகை, 2100ல், பாதிக்கு மேல் குறையும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலையின் கொள்கை கல்வி மையம், சீனாவின் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பத்தாண்டுகளுக்கு முன் சீனாவின் மக்கள் தொகை, ஆண்டுக்கு, 80 லட்சம் என்ற அளவில் அதிகரித்தது. இதையடுத்து, சீனாவில் கல்வி, வீடு, உணவு உள்ளிட்டவற்றுக்கான வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறைந்தது. உடனே சீன அரசு, … Read more

ரஷ்ய அதிபர் புடினின் பார்வை பறிபோகிறது?| Dinamalar

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கண் பார்வையை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிபர் விளாடிமிர் புடின், 69, புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருக்காது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழந்து வருகிறார். அவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் உருவாக்கித் தர வேண்டியுள்ளது. கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்க்காக இம்மாத … Read more

எதிரிகளை கொடூரமாக கொல்லும் ரஷ்ய அதிபர் புடினின் கோர முகம்| Dinamalar

மாஸ்கோ : எதிரிகளை அழிக்க அதீத வீரியம் கொண்ட விஷத்தை ரஷ்ய அதிபர் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் நடத்தும் ரஷ்யா மீது, மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இருந்தும் ரஷ்ய அதிபர் புடின், உலக நாடுகளின் எந்த வார்த்தைக்கும் செவி சாய்க்காமல் சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எதிரிகளை அழிக்க மிக அதிக வீரியம் கொண்ட விஷத்தை ரஷ்ய அதிபர் புடின் பயன்படுத்துகிறார் என்ற அதிர்ச்சி தகவல் … Read more

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு கலவரத்தினால் 70,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு.!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அரசுப் படையினருக்கும், பழங்குடியின கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையினால், வாழ்வாதாரம் இழந்த மக்கள் உணவு, குடிநீரின் கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அண்டை நாடான உகண்டாவில் 7 … Read more

மாணவர்கள் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு| Dinamalar

கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிடச் சென்ற மாணவர்களை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, கொழும்புவில் உள்ள அவர் அலுவலகத்திற்கு முன், 50 நாட்களுக்கு மேலாக ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று … Read more

சாலையோர மரத்தில் மோதி பயணிகள் பேருந்து விபத்து… 10 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் மரத்தின் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். வசிர்புர் பகுதியில் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் சிலர் கவலைக் கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   Source link

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், ஒருவர் உயிரிழந்தார். துல்சா நகருக்கு அருகே நடைபெற்ற வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான நிகழ்வின் போது, புகுந்த புகுந்த மர்மநபர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.  கடந்த 5 … Read more

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது – ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது என ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள், அப்பாவி மக்களின் மரணங்கள் சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்ய அதிபர் புடினின் செயலை கண்டிக்க கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். புடின் தனது நோக்கத்தை அடையமாட்டார் என்றும் சான்செஸ் தெரிவித்தார். புடினின் ஆட்சியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைனை ஆதரிப்பதே ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் எதிர்காலம் இருப்பதை உறுதி செய்யும் ஒரே வழி என்றும் தெரிவித்தார். Source link

பிரேசில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

ரியோ டி ஜெனிரோ,: பிரேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். … Read more