நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் கண்டறியப்பட்டதாக தகவல்.!

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம், மனபதி ஹிமல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. நான்கு இந்திய பயணிகள் உள்ளிட்டோருடன் பொக்காராவில் இருந்து கோம்சோம் நகருக்கு காலை 9.55 மணிக்கு புறப்பட்ட தாரா ஏர் நிறுவனத்தின் விமானம், 15 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி, விபத்துக்குள்ளான விமானம் லாம்சே ஆற்றிற்கு அருகே மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக நேபாள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். … Read more

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு

கொழும்பு, மே. 29- இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் நிலையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த மாதம் 9-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர். அதிபர் மாளிகை முன்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகி விட்ட நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்து விட்டார். … Read more

113வது பிறந்த நாளை கொண்டாடிய உலகிலேயே மிக வயதான நபர்..!

வெனிசுலாவின் தச்சிரா மாநிலத்தில் உலகிலேயே மிக வயதான மனிதரான ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 113 வது பிறந்த நாளை தேவாலயத்தில் கொண்டாடியுள்ளார். உலகின் மிக வயதான நபர் என கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பெரெஸ் மோராவுக்கு 41 பேரக்குழந்தைகள்,18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இசை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறந்தநாள் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் மற்றும் … Read more

நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் … Read more

மர்மமான பெர்முடா பயணம் மேற்கொள்ள தயாரா; கப்பம் நிறுவனத்தின் பகீர் ஆஃபர்

உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா, பெர்முடா, புவர்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் பெர்முடா முக்கோணம் அதாவது Bermuda Triangle என கூறுகிறார்கள். சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல … Read more

கண்ணாடி கதவுகளை உடைத்து கொண்டு கடைக்குள் புகுந்த கார்.. தூக்கி வீசப்பட்ட ஊழியர்கள்.!

அமெரிக்காவில், கார் கடைக்குள் புகுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அரிசோனா மாகாணத்தின் டெம்ப் நகரில், கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் வேலை செய்த ஊழியர்கள் இருவர் 25 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். விபத்து குறித்த வீடியோவை பதிவிட்ட போலீசார், கார் ஓட்டுனர் கவனக்குறைவாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.  Source link

மெக்சிகோ- அயர்லாந்திலும் குரங்கம்மை பரவியது

மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 2 நாடுகளுக்கு குரங்கம்மை பரவி உள்ளது. மெக்சிகோவில் முதன் முதலாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சென்று வந்திருந்தார். அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் … Read more

பெர்முடா முக்கோணம் சுற்றுலா செல்வோருக்காக விளம்பரம்.. முழுப் பணத்தைத் திருப்பித் தருவதாக ஏஜன்சி உறுதி.!

பெர்முடா முக்கோணப் பகுதிக்கு சொகுசுக் கப்பலில் சுற்றுலா அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜன்சி ஒன்று கப்பல் மாயமாக மறைந்துவிட்டால் முழுப்பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளது. வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள வரையறுக்கப்பட்டப் பகுதியான பெர்முடா முக்கோணத்தில் நிறைய விமானங்களும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வாழ்நாள் சலுகையாக அந்த டிராவல் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில், கவலைப்படாதீர்கள், இந்த பெர்முடா முக்கோணப் பயணத்தில் எதிர்பாராதவிதமாக மாயமாகி விட்டால் உங்கள் பணம் திருப்பித் … Read more

22 பேருடன் சென்ற நேபாள விமானம் மாயம்

காத்மாண்டு: பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET விமானம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்ராவிலிருந்து, வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. நான்கு இந்தியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேபாள நாட்டின் விமானம் … Read more

பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். பெர்னாம்பகோ மாகணத்தில் கடந்த இரு நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பேரிடரில் சிக்கி 35 பேர் உயிரிழந்த நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மண் சரிவுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை மாகாண அரசு … Read more