ரனிலை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு- இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. மக்களின் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக நேற்று முன்தினம் ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவர் மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதை விரைவில் உறுதி … Read more

ஆஸ்திரேலிய தேர்தல் பிரசாரத்தில் வட கொரிய அதிபர் பங்கேற்பா?| Dinamalar

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட இடத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போலவே தோற்றம் உடைய நபர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில், 21ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாடு முழுதும் நடந்து வருகிறது. தேர்தலில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று, ஆஸ்திரேலியாவின் சிஸ்ஹாம் பகுதியில் உள்ள … Read more

பின்லாந்துக்கு மின் விநியோகத்தை நிறுத்துகிறது ரஷ்யா.!

நேட்டோவில் இணைய விண்ணப்பித்ததை கண்டித்து பின்லாந்துக்கு மின்சார விநியோகத்தை ரஷ்யா நிறுத்த உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தை அடுத்து ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய நாடான பின்லாந்து நேட்டோவில் இணைவதில் உறுதியாக உள்ளது. இதனைக் கண்டித்து பின்லாந்துக்கு வழங்கி வரும் அனைத்து மின் விநியோகத்தையும் ரஷ்யா நிறுத்த உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மின்சார வாங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், ஏற்கன்வே வாங்கிய மின்சாரத்திற்கு பணம் செலுத்த முடியாது என்றும் பின்லாந்து தெரிவித்துள்ளது.  Source link

ஏ.டி.எம். கார்டுகளில் கொரோனா வைரஸ்: 48 மணி நேரம் உயிர் வாழும்- ஆய்வில் தகவல்

லண்டன்: கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் பல்வேறு பொருட்களில் பல மணிநேரம் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. காகிதம், பிளாஸ்டிக், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் படர்ந்து இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களிடம் அதிகமாக புழங்கும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைத்து ஏ.டி.எம். மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று … Read more

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

வெல்லிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களுக்கு பாதுப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக தலைவர்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கினர். அதில் சிலர் மரணமடைந்தனர். பலர் மீண்டு வந்தனர்.  இந்நிலையில் தற்போது நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு … Read more

வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் 21 பேர் பலி

பியாங்யாங்: சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தப்பவில்லை.  எனினும், ஒரு சில நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தவில்லை என தகவல் வெளியானது.  வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில், அந்நாட்டில் முதன்முறையாக … Read more

இலங்கை எம்பி அடித்து கொல்லப்பட்டார்- பிரேத பரிசோதனையில் தகவல்

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மே 9ம் தேதி கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டதில் இரு தரப்பினருக்கும் இடையில் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையின்போது ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார். தனது காரை மறித்த போராட்டக்காரர்களை நோக்கி அமரகீர்த்தி … Read more

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் பெங்குயின் இனம் அழியும் அபாயம் – ஆய்வாளர்கள்

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் உள்ள பெங்குயின் இனம் அழியும் அபாயம் உள்ளது என நம்புவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் வானிலை மாறி, அதிக வெப்பம், சீரற்ற மழைப் பொழிவு, என பனி வேகமாக உருகி வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. கால நிலை மாற்றத்தால் பெங்குயின் இனத்தில் பெரிய வகையான பேரரச பெங்குயின்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பனி உருகி வரும் வேகத்தால் அடுத்த … Read more

பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி வங்கி

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி … Read more