நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்…ரஷியாவின் எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய உக்ரைன் ஆபரேட்டர்

இயற்கை எரிவாயு வினியோகம் நிறுத்தம் உக்ரைன் நடவடிக்கையால் ரஷ்யா ஆத்திரம்| Dinamalar

ஜபோரிஜியா:ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய்கள் வாயிலாக செல்லும் இயற்கை எரிவாயு வினியோகத்தை உக்ரைன் நிறுத்தி உள்ளது, ரஷ்யாவை ஆத்திரமடைய வைத்துள்ளது.பிப்ரவரி 24ம் தேதி முதல் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.முதலில் கீவ் உள்ளிட்ட பிரதான நகரங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படையினர் தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். துறைமுக … Read more

இலங்கையில் விரைவில் புதிய பிரதமர் – அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதுவும் எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், கோபாவேசமும் மேலும் வலுத்தது. இந்த நிலையில், இதுவரையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி வந்த மகிந்த ராஜபக்சே, நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து பதவி விலகினார்.  அதேநேரத்தில், அரசுக்கு … Read more

லைவ் அப்டேட்ஸ்: பெரிய நகரங்களை மீட்டு முன்னேறி வரும் உக்ரைன் ராணுவம்

12.5.2022 00.45: போரினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் பல்வேறு இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவை அந்நாட்டு ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, மரியுபோல் நகரத்தை உக்ரைன் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளிக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லஞ்சம் தர முயன்ற இந்திய வம்சாவளிக்கு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கிருஷ்ணா ராவ் நரசிம்ம நாயுடு, குடி போதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கியுள்ளார். போலீஸ் விசாரணையின்போது குற்றத்தை மறைக்க, 3,000 ரூபாய் லஞ்சம் தர முயன்றுள்ளார். இதை ஏற்க மறுத்த போலீஸ் அதிகாரி, குடி போதையில் … Read more

ஜெர்மனியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு

பெர்லின், ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக ஜெர்மனியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பணவிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெர்மனியில் எரிபொருள் விலை 35.3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது.  கடந்த … Read more

193 நாடுகளுக்கு விமான பயணம் அமெரிக்க முதலீட்டாளர் சாதனை| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் கிட்சென், 57, என்ற முதலீட்டாளர், 193 நாடுகளுக்கு விமானத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருபவர் ஜிம் கிட்சென்.வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் அதிக விருப்பமுடைய இவர், ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்ட, 193 நாடுகளுக்கு பயணித்து உள்ளார்.இவர், 1.6 கோடி கி.மீ., துாரம் வரை, விமான பயணம் மேற்கொண்டுஉள்ளார்.இதில், பெரும்பாலான பயணங்களுக்கு, ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானங்களை பயன்படுத்தி உள்ளார்.இந்த ஏர்லைன்ஸ் விமானங்களில் மட்டும், 48 லட்சம் கி.மீ., துாரம் பயணித்து உள்ளார்.இவர், … Read more

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

நியூயார்க், ஐக்கிய நாடுகள் சபையில்  இந்தி மொழியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.18 கோடி ரூபாய்) நிதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஐநா அவை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்பு … Read more

இளவரசர் சார்லஸ் உரையுடன் துவங்கியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ராணி இரண்டாம் எலிசபெத் இல்லாமல் கூடியது. அவருக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார். பிரிட்டன் பாராளுமன்றம் கூட்டம் இன்று துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற கூட்டத்தொடர் துவங்கும் போது, ராணி இரண்டாம் எலிசபெத், அணிவகுப்பு மரியாதையுடன் வந்து பாராளுமன்ற அரியணையி்ல் அமர்ந்து அரசின் ஆண்டறிக்கையினை வாசிப்பது மரபு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ராணி … Read more

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி; ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்

மாட்ரிட், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கள்களை சந்தித்து வருகிறது.  முன்னதாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த … Read more