இந்தியாவில் தஞ்சமடைந்ததா ராஜபக்சே குடும்பம்? – இந்திய தூதரகம் மறுப்பு

கொழும்பு:  இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். இதற்கிடையே, பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. … Read more

சீன அதிபருக்குமூளையில் பாதிப்பு| Dinamalar

பீஜிங், :நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சீன அதிபர் ஷீ ஜிங்பிங்,68, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. இந்தாண்டு இறுதியில், மூன்றாவது முறையாக … Read more

ஹைதி நாட்டில் 8 துருக்கியர்கள் கடத்தல்| Dinamalar

போர்ட் அவ் பிரின்ஸ்:துருக்கி நாட்டைச் சேர்ந்த எட்டு பேர், ஹைதி நாட்டில் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கடத்தப்பட்டனர்.வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரில், பஸ்சில் சென்று கொண்டிருந்த, மேற்காசிய நாடான துருக்கியை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் நிலை பற்றி தகவல் இல்லை.கடந்த ஆண்டு அக்டோபரில், தலைநகரில் உள்ள தேவாலய ஊழியர்கள் குடும்பத்தினர் 17 பேர் கடத்தப்பட்டனர். கடத்தல் கும்பலை … Read more

கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பில் பலியான சீனர்கள் – குற்றவாளிகளை கைதுசெய்ய சீனா வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கடந்த மாதம் இறுதியில் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேனில் குண்டு வெடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், கராச்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக சீன … Read more

டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மஸ்க்

வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக்கூறி இருந்தார். இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் டுவிட்டரை … Read more

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் மாஜி சர்வாதிகாரி மகன் வெற்றி| Dinamalar

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான மறைந்த மார்க்கோஸ் மகன் ஜூனியர் மார்க்கோஸ் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதையடுத்து நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ஜூனியர் மார்க்கோஸ், மூன்று கோடிக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் லெனி ரோப்ரெடோ, 1.45 கோடி ஓட்டுகள் பெற்றுள்ளார். தேர்தல் வெற்றி குறித்து … Read more

மக்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையை கைவிடுமாறும் – அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

கொழும்பு, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபா் கோத்தபய ராஜபக்சேவின் அரசே காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.  கொழும்புவில் நடைபெற்று வந்த போராட்டமானது வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியது. இதனையடுத்து மக்கள் அமைதி காக்குமாறும் வன்முறையை நிறுத்துமாறும் அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளாா். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருதாகவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் அதிபா் அதிபா் கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டா் … Read more