போலந்தில் வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்ய தூதர் மீது பெயிண்ட் வீசி தாக்குதல்

போலந்தில் நடைபெற்ற வெற்றி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது பெயிண்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வார்சா நகரில் நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டத்தில், போரில் உயிரிழந்த சோவியத் யூனியன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக சென்ற போலந்து நாட்டுக்கான ரஷ்ய தூதர் செர்கே ஆண்ட்ரீவ் மீது, ரஷ்யாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சிவப்பு வர்ண பெயிண்ட்டை அவரது முகத்தில் வீசினார்.  Source link

இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள்- டேனிஷ் சித்திக் உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு விருது

கொலம்பியா: இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  கொரோனாவின்போது உலகம் கண்ட கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக ஃபீச்சர் புகைப்படங்கள் என்ற பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் … Read more

பிரேசிலில் கனமழை, மண்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். Santa Catarina மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள Tubarao நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றன. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் சிக்கித் தவித்து … Read more

இலங்கையில் விறகுகளாக விற்கப்படும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள்

கொழும்பு : இலங்கைக் கடற்படையில் சிறைபிடிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்ட  விசைப்படகுகள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளனர். அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை ஏலம் விடப்பட்டது. அதில் 130க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தால், பழுது பார்க்க … Read more

கொழும்பு மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச: வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

இலங்கையில் வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற விவரம் ஏதுமில்லை. போராட்டமும் … Read more

அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் ராஜபக்ச கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல் அதிகாரப்பூர்வ இல்லமாக அலரி மாளிகையை பயன்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச இன்று காலை பலத்த ராணுவப் பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுக்கு விமானத்தில் சென்றுவிடலாம் என்பதால் மக்கள் திரண்டனர் நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தகவல் Source link

பற்றி எரியும் இலங்கை- மகிந்த ராஜபக்‌ஷே வெளிநாடு செல்ல ஏற்பாடு

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் … Read more

சீனாவில் திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றிய வானம்.. பீதியில் உறைந்த மக்கள்..!

சீனாவின் துறைமுக நகரமான ஜூஷானில் திடீரென வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறமாக மாறியது. அந்நாட்டு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறுகையில், அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக சூரிய ஒளி தரையை அடைய இயலாமல் சிவப்பு நிறமாக மாறி வானில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். Source link

அணு ஆயுத சோதனையை கைவிட்டால் உதவி செய்வோம்- வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு

சியோல்: வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வடகொரியா அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது.  இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 15வது ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது தென்கொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. விரைவில் வடகொரியா அணு ஆயுதங்களையும் சோதிக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன.  இந்நிலையில் வடகொரியா தனது அணு … Read more

உக்ரைன் நாட்டு தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிர்ந்த ஈபிள் கோபுரம்

பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் நேற்றிரவு உக்ரன் நாட்டின் தேசியக் கொடி நிறமான நீலம் மற்றும் மஞ்சள் நிற வர்ணத்துடன் ஒளிர்ந்தது. போரினால் பாதிக்கப்பட்ட நாடு மற்றும் மக்களிடையே காணப்படும் ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரான்சு விடுத்த கோரிக்கையை ஏற்று ஈபிள் கோபுரம் உக்ரைன் தேசியக்கொடியால் ஒளியூட்டப்பட்டது. Source link