ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம். ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன. உக்ரைன் பற்றிய ரஷ்ய ஜனாதிபதி புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். புதின் தொடர்ந்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும். உக்ரைனுக்கு அதிகளவில் … Read more

பிரதமர் நரேந்திர மோடியுடன் டி.வி. நேரலையில் விவாதம் நடத்த தயார் – இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை விவகாரம், பயங்கரவாதம் என பல பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.  மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை பாகிஸ்தான் அரசு மறைமுகமாக ஆதரித்து வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அரசு துணை போகிறது என இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.  இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. … Read more

கனடாவில் அவசரநிலை நீட்டிக்க தீர்மானம்| Dinamalar

டொரன்டோ:கனடாவில் டிரக் டிரைவர்களின் போராட்டத்தை ஒடுக்க, அரசுக்கு வழங்கிய அவசர நிலை அதிகாரத்தை நீட்டிக்கும் தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது.வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்பது உள்ளிட்ட அரசின் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, டிரக் டிரைவர்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால், அமெரிக்கா – கனடாவின் பல எல்லைகள் மூடப்பட்டன. வர்த்தகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தலைநகர் ஒட்டாவாவில், பார்லி., முற்றுகை போராட்டம் நடந்தது. இதையடுத்து, நிலைமையை … Read more

ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 8.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத் நகருக்கு தென்மேற்கில் 123 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது.  இதனால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கிவிட்டது – இங்கிலாந்து மந்திரி

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா நேற்று அங்கீகரித்தது.  இதனை … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்ப குறைந்த கட்டணத்தில் விமான சேவை வேண்டும்- அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே உக்ரைன் நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி  இந்திய தூதரகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனில் … Read more

அமெரிக்கா: டெல்டாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஒமைக்ரான்…

சான்பிரான்சிஸ்கோ, சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்புகள் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளன. இவற்றில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.  இந்த நிலையில், அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட ஒமைக்ரான் பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என தி சியாட்டில் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் அக்டோபர் 31 வரையில் … Read more

அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா… துர்க்மெனிஸ்தான் மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான், கொரோனாவை தனது நாட்டிற்கு  நுழைய அனுமதிக்கவில்லை. இதுவரை இந்த நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. நாட்டில் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது தவிர, அனைவரும் முகக்கவசம் அணியவும், சமூக … Read more

பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம்: இம்ரான் கானின் விருப்பம்

மாஸ்கோ: “இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு விருந்தினராக பயணம் மேற்கொண்டுள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க இருக்கும் அவர், அதற்கு முன்னதாக, ரஷ்ய டுடேவுக்கு அளித்த பேட்டியில்தான் இந்திய பிரதமருடன் விவாதம் நடத்த விரும்புவதாக சொல்லியுள்ளார். அதில், “இந்தியா ஒரு எதிரி நாடாக மாறியதால் அவர்களுடனான … Read more