பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா பயணம்| Dinamalar

இஸ்லாமாபாத்: பாக். பிரதமர் இம்ரான் கான் நாளை (பிப்.,23) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. பாக். வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பாக். பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவின் அழைப்பை ஏற்று 23, 24 தேதிகளில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க இருக்கும் பிரதமர் இம்ரான் கான் இருதரப்பு நலன் சார்ந்த முக்கிய … Read more

உக்ரைன் குண்டுவீச்சில் எல்லை கட்டமைப்புகள் சேதம்: ரஷ்ய பாதுகாப்புத் துறை குற்றச்சாட்டு

உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம்காட்டுகிறது. இதனால், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் தரப்பிலும் படைகள் குவிக்கப்படுகின்றன. இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், … Read more

பர்கினோ பசோ – தங்கச்சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் 59 பேர் பலி

ஒவ்கடங்கு: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. அந்நாட்டின் பாம்புளோரா என்ற இடத்தில் தங்கச்சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த தங்கச்சுரங்கத்தில் ஊழியர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது தங்கச்சுரங்கம் அருகே திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 59 பேர் பரிதாபமாக பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  விசாரணையில், அந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த … Read more

ஸ்டாலினுக்கு இலங்கை தமிழர் கட்சிகள் கடிதம்| Dinamalar

கொழும்பு : ‘இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கும், 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என, அண்டை நாடான இலங்கையை சேர்ந்த தமிழர் கட்சிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளன. இலங்கை – இந்தியா இடையே, 1987ல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், அப்போது பிரதமராக இருந்த ராஜிவ், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கையெழுத்திட்டனர்.இதன்படி, ‘இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் வழங்கப்படும்; மாகாண கவுன்சில் தேர்தல் நடத்துவது உள்ளிட்டவற்றை உறுதி … Read more

உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரித்தார் அதிபர் புதின்

மாஸ்கோ: ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, உக்ரைனுக்குச் சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீரிக்குமாறு அதிபர் … Read more

உக்ரைன் கிழக்கு மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார் புடின்| Dinamalar

மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்காவும், இதர ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக … Read more

ரஷ்ய அதிபருடன் பேச்சு? நிபந்தனை விதித்த பைடன்

வாஷிங்டன் : “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காவிட்டால், ரஷ்ய அதிபரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசுவார்,” என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்காவும், இதர ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் … Read more

உக்ரைன் விவகாரத்தில் திடீர் திருப்பம்; விரைவில் ரஷிய அதிபர் புதின் – ஜோ பைடன் சந்திப்பு!

வாஷிங்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன.  உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது. இப்போதைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய … Read more

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வர அனுமதி… 2 ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்களை சந்தித்தவர்கள் அன்புப்பெருக்கில் ஆரத்தழுவி கண்ணீர் <!– ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு சுற்… –>

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துவிட்டதையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்ற வண்ணம் உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தங்களது உறவினர்களை சந்தித்த அவர்கள் அன்புப் பெருக்கில் ஆரத்தழுவி ஆனந்தக்கண்ணீர் விட்டனர். சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் விதமாக அவர்களுக்கு, விமான நிலைய அதிகாரிகள் பிஸ்கட்டுகள், ஜாம், கோலா கரடி பொம்மையை பரிசளித்தனர். கொரானா காரணமாக 2 … Read more

உக்ரைனில் இருந்து நுழைய முயன்ற 5 பேரை சுட்டுக்கொன்றது ரஷிய ராணுவம்

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் ரஷியா போர் தொடுக்கும் என அமெரிக்கா கூறி வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் எல்லையில் போர் பயிற்சிகள் தீவிரமடைந்துள்ளன.  இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 5 பேரை சுட்டுக் கொன்றதாகவும், ரோஸ்டோவ் … Read more