Swastika vs Ban: ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்ய கனடா முயல்வதற்கு காரணம் என்ன?

கனடாவில் ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய அரசு தனது கவலையை பகிர்ந்து கொண்டது. ஸ்வஸ்திகா சின்னத்தின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. பாசிசத்துடன் கலாச்சார சின்னத்திற்கு என்ன தொடர்பு? பின்னணியைத் தெரிந்து கொள்ளுங்கள்… ஸ்வஸ்திக் சின்னம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாகரிகங்களிலும் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக் சின்னம்.  பூஜையறை … Read more

ரஷ்யா – பெலாரஸ் இணைந்து கூட்டு போர் பயிற்சி; உக்ரைன் அருகே தயார் நிலையில் ரஷ்ய போர் விமானங்கள்: புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு

உக்ரைன் எல்லையில் படையைக் குறைத்துள்ளதாக ரஷ்யா கூறிய நிலையில், அந்நாட்டு போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பது போன்ற புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பெலாரஸுடன் இணைந்து கூட்டுபோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் பக்கத்து நாடானஉக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய திட்டமிட்டு வருகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன. … Read more

இஸ்தான்புல்லில் வணிக வளாகத்தில் செல்போன் பார்த்துக் கொண்டே சென்று திடீரென பெரிய துவாரத்தில் விழுந்து மற்றொரு துவாரம் வழியாக வெளிய வந்த இளைஞர்.! <!– இஸ்தான்புல்லில் வணிக வளாகத்தில் செல்போன் பார்த்துக் கொண்ட… –>

துருக்கியின் இஸ்தான்புல்லில் வணிக வளாகம் ஒன்றில் செல்போன் பார்த்துக் கொண்டே சென்ற இளைஞர் ஒருவர் திடீரென பெரிய துவாரத்தில் விழுந்து எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொருட்களை கீழே அனுப்புவதற்காக பெரிய துவாரம் உருவாக்கப்பட்டிருந்தது. மூடப்படாமல் இருந்த அதனை கவனிக்காமல் சென்ற அந்த இளைஞர் அதனுள் தவறி விழுந்தார். ஆனால் கீழே விழுந்த அந்த இளைஞரோ தரையில் விழாமல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியின் மீது விழுந்த தால் அதிர்ஷ்டவசமாக … Read more

ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி; அதிரிக்கும் போர் பதற்றம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர்ப் பதற்றம் அதிரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த வெள்ளியன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இதனுடன் டியூ-95 அணுகுண்டுகளையும் நீர்மூழ்கி கப்பல்களையும் சோதனை செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு … Read more

லாகூரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட மூவர் பலி

பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரின் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளனர். லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லையில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய நகரம் லாகூர். வணிக நகரமான இங்கு பல சந்தைகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் இங்கு வருவதுண்டு. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வால்ட் சிட்டிக்கு அருகில் … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டும்.. பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜி 7 நாடுகள் ரஷ்யாவுக்கு வலியுறுத்தல்.! <!– உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டும்.. பேச… –>

உக்ரைன் எல்லையில் நியாயமற்ற முறையில் குவித்துள்ள படைகளை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா,ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி பிரான்ஸ் ஆகிய ஏழு நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 ரஷ்யாவின் நடவடிக்கை ஐரோப்பியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லை விதிகளை ரஷ்யா மீறுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், உக்ரைன் … Read more

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 கோடியை கடந்தது

வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.   உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.   இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.58 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் … Read more

ரஷ்ய ஆதரவுடன் பிரிவினைவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் உயிரிழந்ததால் உக்ரைனில் பதற்றம்| Dinamalar

மாஸ்கோ-ரஷ்ய ஆதரவுடன், உக்ரைனில் பிரிவினை வாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழந்ததால், பதற்றம் அதிகரித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால், இருநாட்டு எல்லைப் பகுதியில், பதற்றமான … Read more

அமெரிக்காவில் 5-ஜி அறிமுகம் செய்ததால் ரத்து செய்யப்பட்ட விமான சேவையை தொடர ஏர் இந்தியாவுக்கு போயிங் அனுமதி

சிகாகோ: அமெரிக்காவில் நேற்று முன்தினம்5-ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்பட்டது. இதனால் விமானங்களின் மின்னணு செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்பதால் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் போயிங் விமானங்களை ரத்து செய்யுமாறு போயிங் நிறுவனம் அறிவுறுத்தியது. போயிங் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் 8 விமான சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்திருந்தது. உரிய சோதனைகளுக்குப் பிறகு மின்னணு பாதிப்பு ஏற்படாதுஎன்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சேவைகளைத் தொடருமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நியூயார்க் நகருக்கு விமான சேவையைஏர் இந்தியா … Read more

ஐரோப்பாவை அச்சுறுத்திய யூனிஸ் புயல் – 13 பேர் பலி

லண்டன்: இங்கிலாந்தில் உருவான யூனிஸ் புயல் தாக்கத்தால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.   யூனிஸ் புயல் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி … Read more