பாக்., இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை| Dinamalar

வாஷிங்டன்-மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மோசடி செய்த பாகிஸ்தானை சேர்ந்த இளைஞருக்கு, 12 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்360 கோடி ரூபாய் அபராதத்தை அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.ந ம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரை சேர்ந்தவர் முகமது ஆதிக், 33. அமெரிக்க மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் காப்பீட்டு திட்டம், மருத்துவ அறிக்கை ஆகியவற்றை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள நிறுவனம் கவனித்து … Read more

உலக மக்களை வறுமையிலிருந்து மீட்க எங்கள் வரியை அதிகப்படுத்துங்கள்: உலக கோடீஸ்வரர்கள் விடுத்த விநோத கோரிக்கை

உலக அளவில் மக்களை வறுமையிலிருந்து மீட்க எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் என்று 100க்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை விடுத்த கோடீஸ்வரர்களில் டிஸ்னி ஹெய்ரிஸ், அபிகெயில் டிஸ்னி ஆகியோரும் உள்ளனர். ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு இந்த வாரம் நடந்தது. இதில் புதன்கிழமை சர்வதேச கோடீஸ்வரர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பேசினர். இதில் 102 கோடீஸ்வரர்கள் சார்பில் கடிதம் வெளியிடப்பட்டது. அதில், “வரிமுறை சரியாக இல்லை என்று … Read more

முகக்கவசம் இனி கட்டாயம் அல்ல: கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது , ”பிரிட்டனில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு விடுதிகள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும். பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணி செய்யலாம். முகக்கவசங்கள் இனி கட்டாயம் இல்லை. எனினும், நெரிசலான இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது நல்லது. … Read more

'உக்ரைன் மீது விரைவில் தாக்குதல்!' – அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை!

ரஷ்யப் படைகள் வரும் நாட்களில் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் போர் தொடங்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் … Read more

சவுதியின் வான்வழித் தாக்குதலால் ஏமனில் இணைய சேவை பாதிப்பு

துபாய்: சவுதி நடத்திய வான்வழித் தாக்குதல் விளைவாக ஏமனில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் ஹொடெய்டா நகரை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஏமனில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையக் கட்டிடத்தில், சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சவுதியின் இந்தத் தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், … Read more

எங்களை சீண்ட வேண்டாம்: கூலாக ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா!

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த படைகள் குவிக்கப்பட்டன. அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. மேலும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ … Read more

சோமாலியா ஓட்டலில் தற்கொலைப்படை தாக்குதல்- 15 பேர் உயிரிழப்பு

மொகடிஷு: சோமாலியாவின் பிலெத்வெயினி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று மதியம் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. வாடிக்கையாளர் போன்று வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.  ஓட்டலும் கடுமையாக சேதமடைந்தது. இந்த  தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  சோமாலியாவில் தேர்தல் நடைமுறைகளை முடிப்பதில் நீண்ட காலதாமதம் மற்றும் … Read more

ஹெல்மெட் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்…| Dinamalar

பீஜிங்: குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கில் பங்கேற்ற நட்சத்திரங்கள் பல்வேறு ‘டிசைன்’ கொண்ட ‘ஹெல்மெட்’ அணிந்து அசத்தினர். சீனாவின் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. உறைந்த பனியில் வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் ஆபத்தான விளையாட்டு ‘ஸ்கெலிடன்’ (எலும்புக் கூடு). சிறிய பலகையில் படுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பனியில் தலைகீழாக 130 கி.மீ., வேகத்தில் வீரர், வீராங்கனைகள் பாய்ந்து வருவர். இவர்களுக்கு ‘ஹெல்மெட்’ மட்டும் தான் பாதுகாப்பு. … Read more

ஏப்ரலில் ஏலத்துக்கு வரும் உலகின் விலையு உயர்ந்த அபூர்வ வைரம்..!

வைரங்கள் என்றாலே விலை உயர்ந்தவை தான். ஆனால், அந்த வைரத்திலும் விலை உயர்ந்த வைரம் இருக்கிறது. நீல நிறத்தில் இருக்கும் வைரம் மிக மிக விலை உயர்ந்தவை. கார்பன் இறுகிய பிணைப்பின் காரணமாக உருவாகும் வைரங்கள் மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக கிடைக்கின்றன. அவற்றில் நீல நிறத்தில் இருக்கும் வைரங்கள் மிகவும் அபூர்வமாக கிடைப்பவை.  மேலும் படிக்க |  HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அந்த வகையில் தற்போது … Read more

இந்தியப் பெருங்கடலில் ஈரான், சீனா, ரஷ்ய நாடுகள் கூட்டுப் பயிற்சி

ஈரான், சீனா, ரஷ்ய நாடுகள் இந்தியப் பெருங்கடலின்ல் வடக்கே கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடற் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக மூன்று நாடுகளும் விளக்கமளித்துள்ளன. ஈரானின் 11 கப்பல்களும், மூன்று ரஷ்ய கப்பல்களும், இரண்டு சீன கப்பல்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சியில் இரவு நேரங்களில் எப்படி சண்டையிடுவது, கடலில் மீட்புப் பணியில் எப்படி ஈடுபடுவது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா, ஈரான், … Read more