ஆஸி., கிரிக்கெட் வீரர் திருமணத்துக்கு தமிழில் பத்திரிகை அடித்து அசத்தல்| Dinamalar

மெல்பர்ன்:பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை, மார்ச் 27ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதற்காக தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது, நிச்சயதார்த்தம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 31, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியான வினி ராமன், 26, என்ற தமிழ்ப் பெண்ணை சந்தித்தார். அவர்களுக்கு இடையில் காதல் ஏற்படவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து 2020ல் இருவீட்டாரின் சம்மதத்துடன் … Read more

Wi-Fi இணைப்பை துண்டித்ததால், குடும்பத்தையே சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்!

இணையம் பல்வேறு வகையில் நமது தகவல்களை அள்ளிக் கொடுக்கும் களஞ்சியமாக இருந்தாலும், அதனிடம் அடிமையாகி, அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று வெறித்தனமான செயலுக்கு சிலர் தூண்டப்படுகின்றனர். அதிலும் சிறுவர்கள் சிலரும் அடிமையாகி, அது கிடைக்காமல் போனால், கொலை, கொள்ளை என இறங்கி விடும் சம்பவங்கள் அதிர்ச்சிகளை கொடுப்பதாக உள்ளன. ஸ்பெயினில் இது போன்ற சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ஒருவர் Wi-Fi இணைப்பை துண்டித்ததால், ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் ஒருவன் … Read more

வானில் வட்டமிட்டபோது திடீரென கொத்தாக கீழே விழுந்து செத்து மடிந்த பறவைகள்..! <!– வானில் வட்டமிட்டபோது திடீரென கொத்தாக கீழே விழுந்து செத்து… –>

மெக்சிகோவில் கூட்டமாக வானில் வட்டமிட்ட பறவைகள் கொத்தாக தீடீரென கீழே விழுந்து செத்து மடிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. வடக்கு மெக்சிகோவின் சிவாவ்வா (Chihuahua) நகரில் அல்வரோ ஆப்ரெகான் (Alvaro Obregon) என்ற இடத்தில் இறந்த பறவைகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வடக்கு கனடாவில் இருந்து குளிர்காலத்துக்காக மஞ்சள் தலை கொண்ட இந்த பறவைகள் இடம்பெயர வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்தோ அல்லது உயர் மின் அழுத்த கம்பியில் … Read more

இந்தோனேசியாவில் ராட்சத அலையில் சிக்கி 11 பேர் பலி

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்கிற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து. இதையொட்டி 20-க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்ச அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு … Read more

புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் கொலை| Dinamalar

இஸ்லாமாபாத்-இஸ்லாம் மதத்தின் புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜங்கிள் தேரா என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் ஒருவர், இஸ்லாம் மதத்தின் புனித நுாலின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்து எரித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கிருந்த சிலர் அந்த நபரை தாக்கினர். மேலும் பலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். எந்த புத்தகத்தையும் கிழிக்கவில்லை என … Read more

ரஷிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரட்டியடிப்பு

மாஸ்கோ,  உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பல் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பசிபிக் கடலில் உள்ள குரில் தீவுக்கு அருகே ரஷியாவின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ்’ போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷிய கடல் பகுதியில் … Read more

சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! <!– சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! –>

சிலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எரிவாயு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். La Cisterna மாவட்டத்தில் உள்ள எரிவாயு கிடங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொளுந்து விட்டெரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள இரண்டு சாலைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் … Read more

சீனாவில் பஸ் வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்

பெய்ஜிங், வடகிழக்கு சீனாவில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 42 பேர் காயமடைந்தனர். லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங் நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. வெடிப்பு ஏற்பட்டபோது பெரும் சத்தம் கேட்டதாகவும் ஆனால் பேருந்து தீப்பிடிக்கவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் பெரும் காயமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் பெரும் குப்பைச் சிதறலுடன் பஸ் … Read more

ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த ஜோ பைடன்| Dinamalar

வாஷிங்டன் : “உக்ரைன் மீது போர் தொடுத்தால், அதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்,” என, ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ … Read more

உக்ரைனில் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

கீவ், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே நகரில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இருதரப்பினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. ஓட்டலில் இருந்த அனைவரும் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த நபர்கள் தொடர்ந்து … Read more