பல கோடி ஆண்டுகள் பழமையான கருப்பு வைரம் ரூ.32 கோடிக்கு ஏலம்…!

லண்டன், 555 காரட்கள் கொண்ட “தி எனிக்மா” என்று அழைக்கப்படும் கருப்பு வைரம் பல கோடி  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் அல்லது சிறுகோள் பூமியைத் தாக்கியபோது  உருவானதாக நம்பப்படுகிறது. உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட இந்த வைரம் லண்டனில் கடந்த புதன்கிழமை ரூ.32 கோடிக்கு ஏலம் விடப்பட்டது 555.55 காரட், 55 முகங்கள் கொண்ட வைரமானது லண்டனின் புகழ்பெற்ற சோத்பியின் ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆன்லைன் ஏல விற்பனையில் விற்கப்பட்டது. இது குறித்து ஏல நிறுவனம் கூறுகையில், … Read more

கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.! <!– கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் … –>

போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு முகமைகளுடன் இணைந்து கடற்பரப்பில் படகுகளில் நடத்திய சோதனைகளில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணூறு கிலோ போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. இந்தியக் கடற்படை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனைகளில் 800 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டதாகத் தெரிவித்துள்ளது. இவற்றின் சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது.             Source link

இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது – அந்நாட்டு அரசு <!– இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவ… –>

இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா படைகளை குவித்து வருவதால், அங்கு வசிக்கும் இங்கிலாந்து நாட்டவர்கள் விமான சேவைகள் உள்ள போதே வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில், விமானம் மூலம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் உக்ரைனில் மேற்கொள்ள முடியாது என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. அதே போல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு மக்களும் … Read more

சிங்கப்பூர் விமான கண்காட்சி – இந்திய போர் விமானம் பங்கேற்பு

சாங்கி: சர்வதேச விமான தொழில்துறை சார்பில் நடத்தப்படும் சிங்கப்பூரில் விமான கண்காட்சி வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   இரண்டாண்டுக்கு ஒருமுறை சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை  காட்சிப்படுத்த இந்த கண்காட்சி வழிவகுத்துள்ளது. நடப்பாண்டு கண்காட்சியில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்கே-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப் படுத்தவுள்ளது.   தேஜாஸ் விமானம் அதன் சிறந்த கையாளுதல் பண்புகள் மற்றும் திறனை வெளிப்படுத்தும்  … Read more

செல்பி எடுத்து அனுப்பியது நாசாவின் டெலஸ்கோப்| Dinamalar

கேப் கனவரல்:அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ள பிரமாண்ட ‘டெலஸ்கோப்’ எனப்படும் தொலைநோக்கி, நட்சத்திர ஒளியின் முதல் படத்தை அனுப்பி வைத்துள்ளது. மேலும், ‘செல்பி’ எடுத்தும் அனுப்பி வைத்துள்ளது. விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்காக, 1990ல் நாசா அனுப்பிய ‘ஹப்பிள்’ என பெயரிடப்பட்ட டெலஸ்கோப்பில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ‘ஜேம்ஸ் வெப்’ என்ற புதிய டெலஸ்கோப்பை விண்வெளியில் நாசா நிறுவி உள்ளது. கடந்த டிசம்பரில் அனுப்பப்பட்ட இந்த டெலஸ்கோப்பின் பாகங்கள் பொருத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.பூமியில் இருந்து, … Read more

இனி இதனை அணிய வேண்டாம்… மக்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு!

கொரோனா மூன்றாவது அலை கடந்த இரண்டு மாதமாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வந்தது. ஊடரங்கு, தடுப்பூசி என உலக நாடுகள் எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டிலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்த தளர்வுகளில் குறிப்பிடும்படியான முக்கிய அறிவிப்பு ஒன்றை இத்தாலி அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக … Read more

ஆளின்றி தானே இயங்கும் ஹெலிகாப்டர் பரிசோதனையை மேற்கொண்ட அமெரிக்கா.! <!– ஆளின்றி தானே இயங்கும் ஹெலிகாப்டர் பரிசோதனையை மேற்கொண்ட அம… –>

முதல் முறையாக பைலட் இல்லாமல் இயங்கும் ஹெலிகாப்டரை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை மேற்கொண்டது. அந்நாட்டின் கென்டக்கி மாநிலத்தில், இந்த ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் சுமார் 30 நிமிடங்கள் வானில் பறக்க வைத்து பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,000 அடி உயரத்தில் மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் பறந்த அந்த ஹெலிகாப்டர், கச்சிதமாக மீண்டும் தரை இறங்கியது. அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை இயக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக … Read more

ஜப்பானில் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.! <!– ஜப்பானில் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்க… –>

ஜப்பானின் நீகாட்டா மாகாணத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் நள்ளிரவில் தீடீரென தீப்பற்றிய நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், 4 பெண்கள் உட்பட 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். பின்னர், சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.  Sanko Seika என்னும் பிரபலமான உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அதிகரிக்கும் கொரோனாவால் அரசு அதிரடி!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது சுகாதாரத் துறையினரை … Read more

பூமியை தாக்கும் சூரிய புயல் – உலகமே இருளில் மூழ்கும் அபாயம்?

விண்ணில் ஏவப்பட்ட 40க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், சூரியப் புயல் காரணமாக எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பி இருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன. இது தொடா்பாக ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது: கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூரியப் புயல், வளிமண்டலத்தை அடா்த்தியாக்கியது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் (ஒரு செயற்கைக் கோளின் … Read more