அடுத்த மாதம் 10-ம் தேதி: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து ஏ.பி.சி செய்தி ஊடகம் கூறும் போது, டிரம்ப்- கமலா ஹாரிஸ் ஒரு விவாதத்திற்கு … Read more

மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயில்: சீனா வெற்றிகரமாக சோதனை

பெய்ஜிங்: சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கென்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிகவேக ரயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அதிகவேக ரயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடியது. இந்த ரயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது.இதனால், இந்த ரயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது 2 கி.மீ … Read more

உலக அளவில் மின்னொளியில் ஜொலிக்கும் நகரங்களில் முதல் இடம் பிடித்த துபாய்

துபாய், சுற்றுலா தொடர்பான சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- துபாய் உலகில் மிகவும் முக்கியமான வணிக நகரமாக மட்டுமல்லாமல், சுற்றுலா நகரமாகவும் திகழ்கிறது. மேலும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை இங்கு அமைத்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலாவுக்காக துபாய்க்கு வருகின்றனர். சமீபத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் … Read more

பெண்ணின் திருமண வயது 9: ஈராக்கில் மசோதா தாக்கல்

பாக்தாத்: ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக் கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது. ஈராக் நாட்டின் தனிநபர் சட்டத்தின்படி பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தசட்டத்தை திருத்தும் முயற்சியில்நீதி அமைச்சகம் புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இது 9 வயது சிறுமிகளுக்கும் 15 வயதுள்ள ஆண் குழந்தைகளுக்கும் திருமணத்தை அனுமதிக்கிறது. இஸ்லாமிய மதச்சட்டத்தை தரப்படுத்தவும் தகாதஉறவுகளிலிருந்து இளம் பெண்களை பாதுகாக்கவும் திருமண வயது குறித்த புதிய மசோதா முயல்வதாக சொல்லப்படுகிறது. … Read more

'வங்காளதேச இடைக்கால அரசுடன் தொடர்பில் உள்ளோம்' – அமெரிக்கா

வாஷிங்டன், வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஷேக் ஹசீனா வெளியேறினார். ஹசீனா ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி … Read more

வங்காளதேசம்: இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஹசீனா வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். ஹசீனா ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் முகமது சஹாபுதீன் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் சென்றுள்ள … Read more

சுனிதா வில்லியம்ஸ் 2025-ல்தான் பூமிக்கு திரும்புவாரா? நாசா கூறுவது என்ன?

நியூயார்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் (61) ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் … Read more

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த புதன்கிழமை மதியம் 1:54 மணிக்கு நேபாள தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர்டைனாஸ்ட்டி ஹெலிகாப்டர் சியாபுருபென்ஸி நகருக்கு புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட அடுத்த 3 நிமிடத்தில் கட்டுப் பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் காத்மாண்டு நகரின் வடமேற்கு பகுதியில் உள்ளசூர்யாசவுர் எனும் மலைக்காட்டில் ஹெலிகாப்டர் நொறுங்கிவிழுந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் ராணுவ மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், … Read more

அமெரிக்க ஆதரவின்றி ஹமாஸ் தலைவர் படுகொலை சாத்தியமில்லை: ஈரான்

தெஹ்ரான், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் குடிமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான … Read more

பயங்கரவாத அச்சுறுத்தல்: பிரபல அமெரிக்க பாடகியின் இசை நிகழ்ச்சி ரத்து

வியன்னா, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 19 வயது நபரும் அடங்குவார். கைது செய்யப்பட்ட நபர்கள் இசை நிகழ்ச்சியில் ரசாயன தாக்குதல் நடத்த … Read more