வங்கதேசம்: நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு!
டாக்கா: வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு இன்று நடைபெற்றது. இந்த புதிய அரசு வங்கதேசத்தில் தேர்தலை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் மருத்துவ சிகிச்சையில் இருந்த யூனுஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இன்று டாக்கா திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாடு மிகவும் … Read more