இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: பெண் படுகொலை; 3 பேர் காயம்

டெல் அவிவ், இஸ்ரேலில் ஹோலன் பகுதியில் இன்று காலை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பெண் (வயது 66) ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். தாக்குதல் நடந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுதவிர, 3 பேர் தாக்குதலில் காயம் அடைந்து உள்ளனர். மேற்கு கரையை சேர்ந்த பாலஸ்தீனிய பயங்கரவாதி இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், போலீசார் அந்நபரை சுட்டுள்ளனர். எனினும், அந்நபரின் நிலைமை உடனடியாக தெரிய வரவில்லை. பயங்கரவாதியின் … Read more

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்: 32 பேர் பலி; இந்தியர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை

டாக்கா: வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மோதல் வலுத்துவரும் நிலையில் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் எக்ஸ் பக்கத்தில், “சில்ஹெட் இந்திய துணை தூகரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் வசிக்கும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் தூதரக அலுவலகத்துடன் … Read more

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்: அமெரிக்க ராணுவ ஜெனரல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம்

ஈரான்: ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் பகுதியாக அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த பயணத்துக்கு முன்னதாக மத்திய கிழக்கில் போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. … Read more

ஹமாஸ் தலைவர் கொலையில் ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்

வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்.7-ல் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது முதல் இஸ்ரேல் உளவுப் படையான மொசாட், ஹமாஸ் முக்கியபுள்ளிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் … Read more

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டது எப்படி? – ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்

தெஹ்ரான், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டது. ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் … Read more

அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவதால் மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்

வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். ஜூலை 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் … Read more

இலங்கை சென்ற இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி

கொழும்பு, இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது. சமீப காலமாக இலங்கையில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சித்து வரும் நிலையில், இந்திய நீர்மூழ்கி கப்பல் இலங்கை சென்றிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு சென்ற இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பப்படுகின்றன. அந்த … Read more

எகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து

புதுடெல்லி, எகிப்தின் புதிய வெளியுறவு மந்திரி பதர் அப்துலாட்டியுடன், மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் இன்று பேசினார். அப்போது, புதிய வெளியுறவு மந்திரியாக பதவியேற்று கொண்டதற்காக அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவருடன் வருங்காலத்தில் பணியாற்றுவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் மந்திரி ஜெய்சங்கர் பதிவிட்டு உள்ளார். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான … Read more

ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 32 பேர் பலி

மொகதிசு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐஎஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் மொகதிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்குள் நேற்று இரவு புகுந்த அல் … Read more

ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: லெபனானில் இருந்து வெளியேற குடிமக்களுக்கு யுஎஸ், பிரிட்டன் அறிவுரை

பெய்ரூட்: மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக லெபனானில் இருந்து வெளியேற தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன. சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை லெபனானில் நிறுத்திக் கொண்டுள்ளன. ஆனாலும் முழுவதுமாக விமான சேவை இன்னும் நிறுத்தப்படவில்லை. அதனால் அங்குள்ள நம் குடிமக்கள் கிடைக்கின்ற விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து, அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் தூதரகங்கள் அறிவுரை … Read more